Showing posts with label தமிழ்ப் பழமொழிகள். Show all posts
Showing posts with label தமிழ்ப் பழமொழிகள். Show all posts

28 October 2011

தமிழ்ப் பழமொழிகள்

தமிழ்ப் பழமொழிகள்  முழுமையானத் தொகுப்பு! pdf வடிவில்

pdf-ஐ scribd-ல் படிக்க 













21 September 2011

தமிழ்ப் பழமொழிகள் -5


இப்பதிவில் 'ஊ ' -ல் மட்டும்.பொறுமையாகப் படியுங்கள்.ஏதேனும் ஒரு கணம் உங்களுக்கு உதவலாம்.பிழைகளோ,சேர்ப்புகளோ ,கருத்துகளோ இருப்பின் பதிவு செய்யுங்கள்.

இதற்கு முன்    இ,ஈ  உ 





  1. ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும்
  2. ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
  3. ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
  4. ஊண் அற்றபோது உடலற்றது.
  5. ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
  6. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
  7. ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
  8. ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
  9. ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
  10. ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா?

15 September 2011

தமிழ்ப் பழமொழிகள் உ - பகுதி-04

இப்பதிவில் 'உ' -ல் மட்டும்.பொறுமையாகப் படியுங்கள்.ஏதேனும் ஒரு கணம் உங்களுக்கு உதவலாம்.பிழைகளோ,சேர்ப்புகளோ ,கருத்துகளோ இருப்பின் பதிவு செய்யுங்கள்.

இதற்கு முன்    இ,ஈ 

  1. உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
  2. உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
  3. உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
  4. உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
  5. உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
  6. உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.
  7. உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
  8. உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
  9. உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
  10. உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
  11. உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
  12. உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை
  13. உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
  14. உப்​பைத் தின்​ற​வன் தண்​ணீர் குடிப்பான்
  15. உரம் ஏற்றி உழவு செய்
  16. உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
  17. உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
  18. உலோபிக்கு இரட்டை செலவு.
  19. உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
  20. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
  21. உளவு இல்லாமல் களவு இல்லை.
  22. உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
  23. உள்ளது போகாது இல்லது வாராது.
  24. உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
  25. உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
  26. உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.
  27.  [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]



14 September 2011

தமிழ்ப் பழமொழிகள் இ, ஈ- பகுதி-03

தமிழ்ப் பழமொழிகள் குறித்த தேடலில் இருந்தேன்.அதுசமயம் பரவலாக பல்வேறு பழமொழிகள் காணக்கிடைத்தன.நிரம்பக் கிடைத்துள்ளது.எனவே இப்பதிவில் 'இ','ஈ' -ல் மட்டும்.பொறுமையாகப் படியுங்கள்.ஏதேனும் ஒரு கணம் உங்களுக்கு உதவலாம்.பிழைகளோ,சேர்ப்புகளோ ,கருத்துகளோ இருப்பின் பதிவு செய்யுங்கள்.

இதற்கு முன்   


இ, ஈ

  1. இக்கரைக்கு அக்கரை பச்சை.
  2. இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
  3. இஞ்சி இலாபம் மஞ்சளில்.
  4. இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
  5. இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
  6. இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
  7. இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
  8. இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
  9. இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
  10. இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.
  11. இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
  12. இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
  13. இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
  14. இராச திசையில் கெட்டவணுமில்லை
  15. இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
  16. இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
  17. இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
  18. இருவர் நட்பு ஒருவர் பொறை.
  19. இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
  20. இல்லது வாராது; உள்ளது போகாது.
  21. இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
  22. இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
  23. இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
  24. இளங்கன்று பயமறியாது
  25. இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
  26. இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
  27. இளைய பிள்ளைக்காரிக்குத் தலைப் பிள்ளைக்காரி வைத்தியம் சொன்னது போல.
  28. இறங்கு பொழுதில் மருந்து குடி.
  29. இறுகினால் களி , இளகினால் கூழ்.
  30. இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
  31. இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
  32. இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
  33. இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?
  34. ஈக்கு விடம்* தலையில், தேளுக்கு விடம்* கொடுக்கில்.
  35. ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
  36. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
  37. ஈர நாவிற்கு எலும்பில்லை.
  38. ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.

*-விடம் =விஷம் .

12 September 2011

தமிழ்ப் பழமொழிகள்-ஆ பகுதி-02

தமிழ்ப் பழமொழிகள் குறித்த தேடலில் இருந்தேன்.அதுசமயம் பரவலாக பல்வேறு பழமொழிகள் காணக்கிடைத்தன.நிரம்பக் கிடைத்துள்ளது.எனவே இப்பதிவில் 'ஆ'-வில் மட்டும்.பொறுமையாகப் படியுங்கள்.ஏதேனும் ஒரு கணம் உங்களுக்கு உதவலாம்.பிழைகளோ,சேர்ப்புகளோ ,கருத்துகளோ இருப்பின் பதிவு செய்யுங்கள்.

 இதற்கு முன்   அ 




  1. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
  2. ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
  3. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
  4. ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
  5. ஆசை வெட்கம் அறியாது.
  6. ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.
  7. ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
  8. ஆடிப் பட்டம் தேடி விதை.
  9. ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
  10. ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
  11. ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமா.
  12. ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
  13. ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
  14. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
  15. ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
  16. ஆயிரங்காலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
  17. ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
  18. ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே
  19. ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்துச் சீனி வாங்க முடியலையாம்!
  20. ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
  21. ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
  22. ஆரால் கேடு, வாயால் கேடு.
  23. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  24. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
  25. ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
  26. ஆழமறியாமல் காலை இடாதே.
  27. ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
  28. ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
  29. ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
  30. ஆழம் தெரியாமல் காலை விடாதே.
  31. ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
  32. ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
  33. ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
  34. ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  35. ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
  36. ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
  37. ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
  38. ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
  39. ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
  40. ஆனைக்கும் அடிசறுக்கும்.
  41. ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
  42. ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.



11 September 2011

தமிழ்ப் பழமொழிகள் -அ பகுதி-01

தமிழ்ப் பழமொழிகள் குறித்த தேடலில் இருந்தேன்.அதுசமயம் பரவலாக பல்வேறு பழமொழிகள் காணக்கிடைத்தன.நிரம்பக் கிடைத்துள்ளது.எனவே இப்பதிவில் 'அ"-வில் மட்டும்.பொறுமையாகப் படியுங்கள்.ஏதேனும் ஒரு கணம் உங்களுக்கு உதவலாம்.
பிழைகளோ,சேர்ப்புகளோ ,கருத்துகளோ இருப்பின் பதிவு செய்யுங்கள்.     

அ 

  1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  2. அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
  3. அகல இருந்தால் பகையும் உறவாம்.
  4. அகல உழுகிறதை விட ஆழ உழு.
  5. அகல் வட்டம் பகல் மழை.
  6. அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
  7. அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
  8. அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
  9. அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
  10. அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
  11. அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
  12. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
  13. அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
  14. அடக்கமே பெண்ணுக்கு அழகு.
  15. அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
  16. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
  17. அடாது செய்தவன் படாது படுவான்.
  18. அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்
  19. அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
  20. அடியாத மாடு படியாது.
  21. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
  22. அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
  23. அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.
  24. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
  25. அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
  26. அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
  27. அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
  28. அந்தி மழை அழுதாலும் விடாது.
  29. அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
  30. அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
  31. அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
  32. அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
  33. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
  34. அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
  35. அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.
  36. அரசு அன்று கொல்லும்,
  37. தெய்வம் நின்று கொல்லும்.
  38. அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
  39. அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
  40. அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது.
  41. அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
  42. அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
  43. அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.
  44. அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?
  45. அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
  46. அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.
  47. அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
  48. அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
  49. அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
  50. அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.
  51. அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.
  52. அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
  53. அவனவன் செய்த வினை அவனவனுக்கு.
  54. அவிசாரி என்று ஆனை மேல் போகலாம்
  55. திருடி என்று தெரு மேல் போக முடியுமா?
  56. அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்.
  57. அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.
  58. அழச் சொல்லுவார் தமர்,
  59. சிரிக்கச் சொல்லுவார் பிறர்.
  60. அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
  61. அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.
  62. அழுத பிள்ளை பால் குடிக்கும்.
  63. அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
  64. அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை.
  65. அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.
  66. அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
  67. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
  68. அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது.
  69. அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
  70. அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரி
  71. அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
  72. அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
  73. அறச் செட்டு முழு நட்டம்.
  74. அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
  75. அறமுறுக்கினால் அற்றுப் போகும்.
  76. அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
  77. அறிய அறியக் கெடுவார் உண்டா?
  78. அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
  79. அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
  80. அறிவீனனிடம் புத்தி கேட்காதே.
  81. அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
  82. அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
  83. அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.
  84. அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.
  85. அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
  86. அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?
  87. அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.
  88. அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
  89. அற்ப சகவாசம் பிராண சங்கடம்.
  90. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
  91. அற்றது பற்றெனில் உற்றது வீடு.
  92. அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
  93. அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
  94. அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
  95. அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.
  96. அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.
  97. அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
  98. அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?