- அக்குளுத்தல் – arm-pit game
- அலவன் ஆட்டல் – play with crabs
- அன்புப்போர் – lovers'sulks
- உடல்வித்தை – gymnastics
- உழலை – peg and hole
- ஊசல் - swing
- ஊதல் (சங்ககாலம்) – blowing
- ஊன்றித் தாண்டல் pole vault
- எண்ணல் விளையாட்டு – counting game
- எழில் விளையாட்டு – gody building
- ஏறுகோள் (ஆயர் விளையாட்டு) – bull-fight
- ஒளிதல் விளையாட்டு - hide and seek
- ஓடியாடல் - touch me
- ஓரை – sea or shore touch-game
- கட்டு (குறிவிளையாட்டு) – marbles rolling (witch watch game)
- கண்புதை விளையாட்டு – eye-binding game
- கவண் – sling
- கவணை – tree-branch sling
- கவறு – odd or even game
- கழங்கு (மகளிர் விளையாட்டு) – marbles rolling (maiden game)
- கழங்கு (வேலன் விளையாட்டு) - witch watch game
- களவுக்காய் – black-marbles
- களிநீர் விளையாட்டு – river-bath festive
- கன்னம் தூக்கல் – rope-swing
- காய்மறை – nut hiding in sand notch
- குத்துச்சண்டை – boxing
- குரவை – hand-binding dance
- குளிர் – rolling instrument playing
- குறும்பூழ்ச்சண்டை watch the Indian-kiwi-bird fight
- கையெறி – love-punch
- கோழிச்சண்டை – watch the cock-fight
- சிற்றில் – parent-like play
- சிறுபாடு – time-pass game
- சூது – marble-gambling
- செதுமொழி – word purifying
- தகர்ச்சண்டை watch the sheep-fight
- தட்டை - flopping instrument playing
- தழல் – fire roll
- தழூஉ – waist-binding dance
- தழை – leaves weaving
- துணங்கை – arm-binding dance
- தெள்விளி (மகளிர்) – tongue whistle
- தெள்விளி (ஆடவர்) - whistle-music
- தெற்றி – marble-scattering
- தைந்நீராடல் – bathing-festive in January
- தொழிற்பாடல் – toil song
- நீச்சல் நடனம் – synchronized swimming
- நீச்சல் பந்து – water-polo
- படகு – பின்படகு – rowing
- படகு – முன்படகு – canoeing
- படகு – வளிப்படகு – wind-surfing
- பண்ணை (விளையாட்டு)– woman-diving
- பந்து – juggling balls
- பறை – drum play
- பாய்ச்சல் – man-diving
- பாவை – sand or flower toy
- பிணையூபம் - pyramid
- புதுமொழி – word building
- புதைமுகம் – face-mask
- புனலாடல் – swimming in falls-pit
- பூ – flower gathering
- பொய்தல் – hide and seek
- போறல் – imitating-games
- மதிமொழி – word recalling
- மரம் – ஏறல் – climb on tree and touch
- மரம் – வளர்த்தல் – plantation games
- மற்போர் – wrestling
- மிதவை – boating
- முக்கால் சிறுதேர் – toy-cart
- முதுமொழி – proverb collection
- மூழ்கல் – plunging game
- யானைப்போர் – watch the elephant-fight
- யானையேற்றம் – elephant-riding
- வட்டு – hard balls
- வட்டு – ஈங்கைவட்டு – give and take marbles
- வட்டு – ஈட்டுவட்டு – gathering marbles
- வட்டு – உருட்டுவட்டு – rolling marbles
- வட்டு – கைகரப்புவட்டு – steeling dies
- வட்டு – கையாடுவட்டு – marble throwing
- வட்டு – கோட்டுவட்டு – marble throwing in a spot
- வட்டு – சூதுவட்டு – gambling dies
- வட்டு – நீர்வட்டு – water-ball
- வட்டு – நெல்லிவட்டு – marble of emblic myrobalam
- வட்டு – மணிவட்டு - குணில் – hockey stick
- வட்டு – மழைத்துளி-வட்டு
- வட்டுநா – golf
- வண்டல் – round-run with clubbing hands to others
- வண்டல் – வண்டற்பாவை - round-run with clubbing hands to others placing a clay-made toy in the middle
- வல்லு – வல்லநாய் – dog-coins move to bind the tiger-coin
- வல்லு (சூது) – dice-gambling
- வில் – வல்வில் வேட்டம் archery
- வில் – வலார் வில் – boy’s archery
- வீளை - mouth whistle
- வேடம் – fancy-dress
"எனைஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனம்ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்
செத்தொழியும் நாளெனக்குத் திருநா ளாகும்." -பாவேந்தர்
Showing posts with label மொழி. Show all posts
Showing posts with label மொழி. Show all posts
25 February 2012
சங்ககால விளையாட்டுகள்
31 January 2012
#2 பரிந்துரை-10
'சாகடிக்கப்படலாம்... நாங்கள் - தோற்கடிக்கப்படமாட்டோம்' என சுளீர் வரிகளால் இலக்கியம் படைத்துவரும் கவிஞர் ஆனந்தன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்.
1. தாய் - மார்க்சிம் கார்க்கி
2. டேல் ஆப் டூ சிட்டீஸ் - சார்லஸ் டிக்கன்ஸ்
3. கல்கியின் சிவகாமி சபதம்
4. சித்திரப்பாவை - அகிலன்
5. அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்
6. புலமைப்பித்தனின் முழு சிறுகதைக் தொகுப்புகள்
7. ஜெயமோகனின் சிறுகதைக் தொகுப்புகள்
8. தோணி - வ.அ.ராசரத்தினம்
9. நனவிடை தோய்தல் - எஸ்.பொ.
10. ஓ.ஹென்றியின் சிறுகதைகள்
1. தாய் - மார்க்சிம் கார்க்கி
2. டேல் ஆப் டூ சிட்டீஸ் - சார்லஸ் டிக்கன்ஸ்
3. கல்கியின் சிவகாமி சபதம்
4. சித்திரப்பாவை - அகிலன்
5. அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்
6. புலமைப்பித்தனின் முழு சிறுகதைக் தொகுப்புகள்
7. ஜெயமோகனின் சிறுகதைக் தொகுப்புகள்
8. தோணி - வ.அ.ராசரத்தினம்
9. நனவிடை தோய்தல் - எஸ்.பொ.
10. ஓ.ஹென்றியின் சிறுகதைகள்
-இன்னும் வரும்
நன்றி-vikatan.com
#1 பரிந்துரை-10
சென்னைப் புத்தகக் காட்சியில், வாசகர்கள் வாங்கிய தமது புத்தகங்களில் கையெழுத்திட்டு, அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தவரிடம், 10 புத்தங்களைப் பரிந்துரைக்கக் கேட்டபோது, நிதானமாக எழுதித் தந்த பட்டியல் இது...

1. அறம் - ஜெயமோகன்
2. காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
3. நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்
4. ஆழிசூழ் உலகு - ஜோடிகுரூஸ்
5. வண்ண நிலவன் கதைகள் - சந்தியா பதிப்பகம்
6. தாயார் சந்நிதி - சுகா
7. கலங்கிய நதி - பி.ஏ.கிருஷ்ணன்
8. ஆறாவடு - சயந்தன்
9. போரும் வாழ்வும் - தால்ஸ்தோய்
10. அசடன் - தாஸ்தாவஸ்கி
-இன்னும் வரும்
நன்றி:vikatan.com
15 January 2012
புதுமை பொங்குக!!! -பேரறிஞர்
ஞாயிறன்று பொங்கல்! அதனைத் தமிழர் திருநாளெனக் கொண்டு போற்றி வாழுபவர். தமிழரெல்லோருக்கும் நாம் பொங்கல் வாழ்த்து அனுப்பக் கடமைப்பட்டுள்ளோம். அனுப்புகிறோம் அன்புடன். தமிழர் வாழ்வே, நம் வாழ்வு எனக் கொண்டு பணியாற்றி, தமிழ் வாழத் தமிழர் வாழ்வர், தமிழர் வாழத் தமிழ்நாடு தழைக்கும் எனக்கூறி அதற்கெனப் பாடுபடும் நாம் தமிழரின் திருநாளன்று நமது அன்பு மொழியைத் தமிழர் இல்லந்தோறும் அனுப்பித் தமிழர் உள்ளமெல்லாம் செல்லச் செய்ய அவாவுகிறோம்.
சென்ற ஆண்டும் பொங்கல் வந்தது. இவ்வாண்டு வருவது போன்றே! ஆண்டுதோறுந்தான் பொங்கல் வந்து போகிறது. அந்நாள் புனலில் குளித்து, புத்தாடை உடுத்தி, பூரித்த உள்ளத்
துடன், இல்லந்தோறும் இன்பத் தமிழரோடு, தமிழர் இருத்தலே முறை.
துடன், இல்லந்தோறும் இன்பத் தமிழரோடு, தமிழர் இருத்தலே முறை.
ஆனால், சென்ற ஆண்டு பொங்கலின்போது இன்பமா இருந்தது? இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டதற்காகக் காளைகளும், காரிகையரும் கடுஞ்சிறையில் கஞ்சியும் கூழும் உண்டு, கல் தரையில் படுத்துருண்டு, காய்ச்சலைத் தோழமை கொண்டு, கல் உடைத்து, கட்டைவெட்டி, நீர் மொண்டு நிலம் பெருக்கி, நிந்தை கேட்டுச் சிந்தை நொந்து வாழ்ந்தனர். அவர்கள் உள்ளம் உறுதிதான். ஆனால், திரேகம் அப்படியல்லவே! அவர்கள் பெற்றோரும், ‘பெறற்கரிய பேறு பெற்றான் எம் மகவு’ என்றுதான் உள்ளத்தில் கருதினர். ஆனால், தம்மனையில் பொங்கி, பொங்கற் புதுநாளன்று இருக்கவேண்டிய சிங்கமனையார், தமிழரைப் பங்கப் படுத்துவதையே தமது பணியெனக் கொண்டு வாழ்ந்த ஆட்சியினரின் – படுத்துவதையே தமது பணியெனக் கொண்டு வாழ்ந்த ஆட்சியினரின் கொடுஞ்செயலால், சிறைப்பட்டு, சோர்ந்து இருப்பதை எண்ணி, வாடினர்.
எத்தனை எத்தனை பிரிவுகள்! எங்கெங்கு வாட்டம்! இன்று எண்ணினாலும் ஏக்கமே வரும்.
அந்த ஆண்டு போயிற்று! அந்தப் பொங்கல் போய்விட்டது. இவ்வாண்டுப் பொங்கலில், இல்லம் தோறும் இன்பம் இருக்கவே மார்க்கம் கிடைத்தது.
ஆனால் இன்பம், பூரணமானதா? இல்லை! தமிழரின் இல்லங்களில், தமிழ் வாழ்வு பொங்குமா? இல்லை! தமிழ்நாட்டில் தமிழர் தழைக்கவா மார்க்கமிருக்கிறது! இல்லை! தமிழ்நாட்டில் தமிழர் வாழவா வழி பல இருக்கின்றன? இல்லை! இல்லை! ஆட்சி தமிழரிடமா? காணோம்! தமிழ்நாடு தமிழருக்கா? இல்லை! இப்போதுதான் அந்த மூலமந்திர முழக்கம் கிளம்பி இருக்கிறது. தமிழ்நாட்டில் இனி சாந்தி, சமாதானம், அமைதி, மனத்திருப்தி ஏற்படக் கூடிய விதத்திலே அரசியல் நடப்பு உள்ளதா? காணோம் அதுவும்!
எனவே, பூரணமான இன்பத்துக்கும் இடமில்லை இவ்வாண்டு. ஆனால், சென்ற ஆண்டு சிந்தை நொந்து வாழ்ந்ததைப் போல இருக்க வேண்டியதுமில்லை.
ஆனால், சென்ற ஆண்டுக்கு இவ்வாண்டு தமிழர் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதிலே சந்தேகமில்லை.
எங்கு நோக்கினும் தமிழர் வாழ்க! தமிழ் வெல்க! தமிழ்நாடு தமிழருக்கே! என்ற பேரொலி கேட்கிறோம்.
யாரைக் கேட்பினும் —“ஆம்! நான் தமிழனே!” எனப் புன்சிரிப்புடன் மார்தட்டிக் கொண்டு கூறக் கேட்கிறோம். நாள்தோ-றும் ஊர்தோறும் தமிழர் கூட்டங்கள், தமிழர் பரணி, தமிழர் முழக்கம் நடந்தபடி உள்ளன. தமிழரின் தலைவர் தமிழர் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டுவிட்டார். தமிழர் தம்மை உணரத் தொடங்கிவிட்டனர். தம்மவரைத் தழுவத் தொடங்கி விட்டனர். தம் நாட்டில் தமது மொழியைக் காக்கத் தொடங்கிவிட்டனர். தம் நாட்டில் பிறனுக்கு ஆதிக்கமேன் எனக் கேட்கத் துணிந்து விட்டனர். தம் நாட்டில் தாமே வாழவேண்டும். அரசு தமதே ஆட்சி தமதே எனக் கூற உறுதி கொண்டு விட்டனர். தமிழர் விடுதலைப் போரிட முனைந்து விட்டனர்.
எனவே, இவ்வாண்டு பொங்கலன்று வீடுதோறும் செந்நெல் மணி வாடையுடன் செந்தமிழின் மணமும் சேர்ந்து கமழும் என நம்புகிறோம்.
அந்த நம்பிக்கையே நமது இன்பத்துக்குக் காரணம்.
பொங்கல் புது நாளின் கருத்து மிக அழகியது. பொருள் ததும்புவது.
ஆரியர் கொண்டாடும் ஆபாசப் பண்டிகைபோல எதிரியை எப்படியோ வதைத்து விட்டதற்காகக் கொண்டாடும் நாளன்று! ஆரியர் பண்டிகை, வெறியாட்டம்! அவை சூதும் சூழ்ச்சியும் வீரத்தை வாட்டி வதைத்ததை விளக்கும் பண்டிகைகள்; பொங்கற் புதுநாள் அத்தகைமைத்தன்று.
பாடுபட்டால் பயன் உண்டு! உழைத்தால் வாழ்வுண்டு! என்ற மூலக் கொள்கைக்கு ஏற்ற நாள் அது.
காட்டைத் திருத்தி, நிலமாக்கி, மேட்டை அகற்றிக் குளமாக்கி, கரடுமுரடைப் போக்கி வாய்க்கால்களாக்கி, வயல்கள் பலவும் அமைத்து, வரப்புகள் தொகுத்து, உழுது நீர்பாய்ச்சி, களை எடுத்துக் காப்பாற்றி, முற்றிய கதிரை அறுத்து வந்து முற்றத்தில் கொட்டி, அளந்து எடுத்து ஆனந்தத்துக்கு அடிகோலும் நாளாகும் அந்நாள்.
உழைப்பின் பயன் இதுவென உணர்ந்து, மகிழ்ச்சி பொங்குகிறது என்பதை மனத்தில் இருத்த வேண்டி, பாற்பொங்கலிட்டு, “பொங்கலோ! பொங்கல்!” எனத் தீந்தமிழ் மொழி புகன்று, தித்திக்கும் பண்டமுண்டு திருநாள் கொண்டாடும் நாளாகும்.
உழைப்பின் பயன் இதுவென உணர்ந்து, மகிழ்ச்சி பொங்குகிறது என்பதை மனத்தில் இருத்த வேண்டி, பாற்பொங்கலிட்டு, “பொங்கலோ! பொங்கல்!” எனத் தீந்தமிழ் மொழி புகன்று, தித்திக்கும் பண்டமுண்டு திருநாள் கொண்டாடும் நாளாகும்.
அந்நாள், தமிழர் தமது உள்ளத்தில் ஒரு விஷயத்தை நினைவிலிறுத்துவர் என நம்புகிறோம்.
திருந்தாத வயலில் உழவு இல்லை. நம்நாடு திருந்தாத வயலாகவே இன்னமும் உள்ளது. எனவேதான் இங்குத் தன்னாட்சி முளைக்கவில்லை.
வரம்பு கட்டாவிடில் வயலுக்கு வயல் வம்பு வளரும். அஃதே போலத்தான், தமிழர் தம்நாட்டின் வரம்பு கட்டத் தவறி, அதாவது தமிழ்மொழி, கலை, மார்க்கம் ஆகியவை ஆரியத்தால் சிதைக்கப் படாதிருக்க வேண்டித் தன்மானம் எனும் வரம்பு கட்டத் தவறியதால் இன்று நமது நாடு பிறருக்கே சந்தையாகிவிட்டது.
உழுது நீர்ப்பாய்ச்சிக் களை எடுக்கா முன்னம், பச்சைப் பயிர் பார்க்க முடியுமா? செந்நெல் தேட இயலுமா? நாம் இங்கே நம் நாட்டுக் களைகளைப் போக்கினோமா! இல்லையே! அதோ தீண்டாமை எனும் கோரமான களை இருக்கிறது. பார்ப்பனியம் எனும் பண்டைப் பயங்கரப் பாசி அடிமுதல் நுனிவரை படர்ந்திருக்கிறது. பித்தலாட்டக் கொள்கைகள் எவ்வளவு! பாமரர் ஏய்க்கப்படுவது எத்துணை. குருட்டுக் கொள்கையும், முரட்டுப் பிடியும், வரட்டு வீரமும், கிழட்டுப் போக்கும், பகட்டுப் பேச்சும், இங்கேயுள்ள களைகள்! இவை போக்கப்படா முன்னம், பயிர் எது? இவற்றைக் களைவதன்றோ, பண்ணையில் அக்கரை கொண்டோரின் கடன்.
எனவே, இவ்வாண்டு பொங்கலன்று, தமிழர் உள்ளத்திலே புதுமை பொங்கவேண்டும். தமிழரின் வாழ்வுக்கு எதிரிடையாக உள்ளவை யாவும் மங்கும்படி செய்தல் வேண்டும்.
ஒன்று மங்கிவிட்டது. மறுபிறப்பு எடுக்க எண்ணுகிறது. எனினும், மீண்டும் வரினும், மிக விரைவில் பங்கப்பட்டுப் போகும் என்பதிலே சந்தேகமில்லை.
ஒழிந்து போன காங்கிரஸ் ஆட்சியைத்தான் நாம் குறிப்பிடுகிறோம்.
உழவரையே பெரிதும் ஏய்த்து ஒட்டுப்பெற்ற ஆட்சி உழவர் சார்பில் ஒரு சிறு நலனும் செய்யவில்லை.
வரி எல்லாம் போகும் என்று கூறியவர்கள், வரிபல போட்டு வாட்டினர். நிலவரிவஜா விஷயத்தில் ஏதோதோ கூறினர். ஏதும் செய்ய இயலவில்லை எனக் கூறிவிட்டுப் போயும் விட்டனர். பள்ளிகள் மூடினர். மருத்துவ சௌகரியத்தை மாய்த்தனர். பண்டங்களின் விலை ஏறும்படி விற்பனை வரிபோட்டு ஏழைகளை வாட்டினர். தொழிலாளர் துயரம் பெருகிற்று. வகுப்புக் கலவரம் வளர்ந்தது. தீண்டாதார் துயரம் அதிகரித்தது. அப்பா! அவர்கள் ஆட்சி! “இன்னும் எத்தனை நாள்?” இன்னும் எத்தனை நாள்?” என்று கேட்டபடி இருந்தனர் தமிழர். இன்று இல்லை அவர்கள்! ஒழிந்தது அந்த ஆட்சி! தீர்ந்தது அவர்களின் தர்பார்! நாடு பூராவும், அவர்கள் போனதற்குப் புலம்பவில்லை. பூரித்தது, விடுதலை விழாக் கோண்டாடி, “போனாயா, ஒழிந்தாயா” என்று கூறி விட்டது.
எனவே, தமிழருக்கு ஆபத்தாக வளர்ந்த ஆட்சி மங்கி மடிந்தது.
பொங்கற் புதுநாளன்று, இச்சிந்தனையொன்றே தமிழரின் செந்தேனாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அம்மட்டோ? அந்நாள், ‘இழந்த இடத்தை’ மீண்டும் பிடிக்க, எவ்வளவு இழிந்த செயலில் இறங்கவும் அவர்கள் இறங்கிவிட்டார்கள் என்பதை எண்ணி, அத்துடன், வந்த பதவியை வேண்டாம் எனக் கூறிய தமிழர் தலைவரின் தீரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழரின் நெஞ்சில் ஏன் துன்பம் பெருகாது எனக் கேட்கிறோம்.
அதோ அந்தக் கும்பல் இன்னமும் அலைந்து திரிகிறது அதிகாரத் துண்டுகளுக்கு. இதோ தமிழர் தலைவர், “எமக்கேன் இது, எமக்கு வேண்டியது தமிழ்நாடு” “தமிழ்நாடு தமிழருக்கே” என முழக்கம் செய்கிறார்.
ஆங்கிலக் கவி ஷேக்ஸ்பியர் கூறியபடி, “அந்தப் படத்தையும் பாருங்கள், இந்தப் படத்தையும் பாருங்கள்” என்று நாம் கூறுகிறோம்.
பொங்கற் புதுநாளன்று தமிழரின் மனக்கண் முன்பு இக்காட்சி தோன்றட்டும்.
தமிழ்நாட்டில் ஒற்றுமை பொங்குகிறது. தமிழரின் எதிரிகளின் கோட்டையில் புரட்சிச் சங்கமே ஓங்குகிறது.
தமிழர் கட்சியில், மேலும் மேலும் பலர் வந்து அணிவகுப்பில் நான் முன்னே நீ முன்னே என்று சேருகின்றனர். தமிழரின் எதிரிகளில், “போடாபோ, நரிமகனே எட்டிநில் நீ கவிழ்க்கப் பட்டாய்’ என்ற தண்டனைத் தாக்கீதுகள் பொங்கி வழிகின்றன.
காங்கிரஸ் ஆட்சி ஒழிந்ததற்குத் திருநாள் காந்தியார் வாழும் இடத்திலே நடந்தது. தமிழரின் தலைவர் பெரியார் தமிழ்நாட்டைத் தாண்டிச் சென்று, பம்பாய் மாகாணத்தில் தமிழர் இலட்சிய விளக்கம் செய்தார்.
“காங்கிரசிடம் நம்பிக்கை இல்லை, நாம் கூடி முடியாது, நம்பமாட்டோம்” என முஸ்லிம் லீகும், ஆதி திராவிடர்களும் கூறி விட்டனர். தமிழர் தலைவருடன் அளவளாவிப் பேசி, ஒத்துழைப்பதாக உறுதி கூறி, அகில இந்திய முஸ்லிம்லீக் தலைவர் ஜனாப் ஜின்னாவும், ஆதிதிராவிடப் பெருங்குடி மக்களின் அண்ணல் டாக்டர் அம்பேத்கரும் வாக்குக் கொடுத்தனர்.
புத்துலக வாழ்வுக்கு முட்டுக் கட்டையாக உள்ள காங்கிரஸ் என்னும் கூட்டத்தின் கொட்டத்தை அடக்க மூவரும் ஒன்று கூடியுள்ளனர்.
எனவே, தமிழருக்கு இனி இன்பம் பொங்க மார்க்கமேற்பட்டு விட்டது.
தமிழர்கள் யாவருக்கும் இனிப் புத்துலக வாழ்வு நிச்சயம். அதற்காகப் போரிட வேண்டும்; பாடுபட வேண்டும். களை எடுக்க வேண்டும். இக்கருத்தையே பெரிதும் உள்ளடக்கிய பொங்கற் புதுநாளன்று தமிழர்கள் உள்ளத்தில் இவ்வெண்ணங்கள் பொங்க வேண்டுமென விரும்புகிறோம்.
உமது இல்லந்தோறும், உள்ளம் தோறும் பொங்குக புதுமை என அன்புடன் வாழ்த்தி, உமது இன்பமே, எமது குறிக்கோள் என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்க தமிழர்!
வாழ்க தமிழ்நாடு!!
புதுமை பொங்குக!!!
தமிழ்நாடு தமிழருக்கே!!!!
வாழ்க தமிழ்நாடு!!
புதுமை பொங்குக!!!
தமிழ்நாடு தமிழருக்கே!!!!
(விடுதலை, 13-1-1940 ப.2)
-மீள்பதிவுக்கட்டுரை -பேரறிஞர் 'விடுதலை'-யில் எழுதியது.
02 January 2012
வரலாற்றுச் சுவடுகள்
மேலே உள்ள படத்தை பாருங்க. இந்த படத்தில் இந்தியா எப்படியிருக்கு? இலங்கை என்ற வரைபடம் தெரியுதா? கொஞ்சம் உத்துப் பாருங்க. ஆமாங்க.... நாம் நம்பித்தான் ஆகனும். இந்த லெமு காலத்திற்கு நீங்க போக வேண்டாம். 7000 வருடங்களுக்கு முன்பு ஈழம் என்பது ஒரு தனித்தீவே அல்ல. இப்ப நாம சொல்ற மன்னார் வளைகுடா அல்லது பாக் ஜலசந்தி போன்ற வார்த்தைகள் எல்லாமே காலப்போக்கில் இயற்கை உருவாக்கிய அற்புதம்.
ஆங்கிலேயர்கள் தெளிவாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தங்களோட பெயரையே சூட்டிக்கிட்டாங்க.இராமேஸ்வரத்திலிருந்து இப்ப உள்ள இலங்கைக்கு நடந்தே போயிடலாம்ன்னு சொன்னா நம்புவீங்களா?
நன்றி:
04 December 2011
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை
கனத்த கவிதை !
பார்ட்டிக்கு போனேன் அம்மா
நீ சொன்னதை மறக்கவே இல்லை
குடிக்க வேண்டாம் என்று சொன்னாய் என்று
சோடா மட்டும் குடித்துக் கொண்டேன்
நீ சொன்னதை போலவே அம்மா ,
பெருமையாய் இருந்தது எனக்கு.
குடித்து விட்டு ஓட்டவில்லை அம்மா
செய் ,என்று பிறர் தூண்டிய போதும்
சரியாகவே செய்தேன் தெரியும் அம்மா,
நீ சரியாகவே சொல்வாய்,அதுவும் தெரியும்
பார்ட்டி முடிந்து கொண்டிருக்கிறது அம்மா
எல்லாரும் கலைந்து கொண்டிருக்கிறார்கள்
காருக்குள் ஏறும் போது தெரியும் அம்மா,
பத்திரமாய் வந்து சேர்வேன் என்று
பொறுப்பும் அன்பும் சொல்லி
எனை நீ வளர்த்தது அப்படி அம்மாஓட்டத் துவங்கிவிட்டேன் அம்மா,
ஆனால் சாலைக்குள் வந்த போது
அடுத்த கார் என்னை கவனிக்காமல்
இடியாக மோதிக் கடந்தது
ரோட்டோரம் கிடந்த போது அம்மா
போலீஸார் பேசிக் கொண்டார் ,
"அடுத்த காரிலிருந்தவன் குடித்திருக்கிறான் "
ஆனால் விலை கொடுக்கப்போவது நான்தான்
நான் இறந்து கொண்டிருக்கிறேன் அம்மா
நீசீக்கிரம்வரமாட்டாயாஎன்றுஏங்கிக்கொண்டே..
இது எப்படி எனக்கு நடக்கலாம் அம்மா ?
வெறும்பலூனைப்போல்வெடித்ததுஎன்வாழ்க்கை
எனை சுற்றிலும் எங்கும் ரத்தம் அம்மா,
அதில் அதிகம் என்னுடையது தான் .
டாக்டர் சொன்னதை கேட்டேன் அம்மா
சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன்.
இதை மட்டும் உன்னிடம் சொல்ல வேண்டும்அம்மா,
நான் சத்தியமாக குடிக்கவில்லை .
அவர்கள் குடித்திருந்தார்கள் அம்மா
அவர்கள் எதையும் நினைக்கவில்லை
நான்போனபார்ட்டிக்கேகூடஅவனும்வந்திருக்கக் கூடும்
ஒரே ஓர் வித்தியாசம் தான்
அவன் குடித்தான்
நான் இறக்கப் போகிறேன் .
எதற்காக குடிக்கிறார்கள் அம்மா?
வாழ்க்கை வீணாக போகக் கூடுமே.
அம்மா, வலிகள் உணர்கிறேன் இந்நேரம் ,
கத்திப் போல் கூர்மையாக
என்னைமோதியவன்நடந்துகொண்டிருக்கிறான் அம்மா
இது கொஞ்சமும் நியாயமில்லை
இங்கே நான் இறந்து கொண்டிருக்கிறேன்
வெறித்துப்பார்க்கிறான் அவன், வேறு என்னசெய்ய முடியும்
தம்பியை அழ வேண்டாம்என்றுசொல்லுங்கள் அம்மா,
அப்பாவை தைரியமாக இருக்கசொல்லுங்கள் .
நான் சொர்க்கம் சேர்ந்த பின்னால்
"நல்ல பையன்" என்று என்கல்லறையில் எழுதி வையுங்கள்.
எவரேனும்அவனுக்குசொல்லியிருக்கவேண்டும் அம்மா
குடித்து விட்டு ஓட்ட வேண்டாம் என்று
எவரேனும் சொல்லிமட்டுமிருந்தால் அம்மா
நான் இன்னமும் உன் மகனாயிருந்திருப்பேன்
என் மூச்சடைக்கிறது அம்மா
ரொம்ப பயமாய் இருக்கிறது
எனக்காக அழாதே அம்மா..
எனக்காக எப்போதும் நீ இருந்தாய் ...
ஒரே ஒரு கேள்வி தான் அம்மா
நான் விடை பெற்றுக் கொள்ளும் முன்னால்
குடித்துவிட்டு ஒட்டியது நானில்லை
இறப்பது மட்டும் ஏன் நானாகவேண்டும் ?
தமிழில் : பூங்குழலி
நன்றி-http://www.eegarai.net/
29 October 2011
தமிழில் எண் குறிகள்
தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.
| 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 100 | 1000 |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ௦ | ௧ | ௨ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | ௰ | ௱ | ௲ |
எண் ஒலிப்பு
- ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் சொற்களும் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
| எண் | அளவு | சொல் |
|---|---|---|
| 1/320 | 320 ல் ஒரு பங்கு | முந்திரி |
| 1/160 | 160 ல் ஒரு பங்கு | அரைக்காணி |
| 3/320 | 320 ல் மூன்று பங்கு | அரைக்காணி முந்திரி |
| 1/80 | 80 ல் ஒரு பங்கு | காணி |
| 1/64 | 64 ல் ஒரு பங்கு | கால் வீசம் |
| 1/40 | 40 ல் ஒரு பங்கு | அரைமா |
| 1/32 | 32 ல் ஒரு பங்கு | அரை வீசம் |
| 3/80 | 80 ல் மூன்று பங்கு | முக்காணி |
| 3/64 | 64 ல் மூன்று பங்கு | முக்கால் வீசம் |
| 1/20 | 20 ஒரு பங்கு | ஒருமா |
| 1/16 | 16 ல் ஒரு பங்கு | மாகாணி (வீசம்) |
| 1/10 | 10 ல் ஒரு பங்கு | இருமா |
| 1/8 | 8 ல் ஒரு பங்கு | அரைக்கால் |
| 3/20 | 20 ல் மூன்று பங்கு | மூன்றுமா |
| 3/16 | 16 ல் மூன்று பங்கு | மூன்று வீசம் |
| 1/5 | ஐந்தில் ஒரு பங்கு | நாலுமா |
| 1/4 | நான்கில் ஒரு பங்கு | கால் |
| 1/2 | இரண்டில் ஒரு பங்கு | அரை |
| 3/4 | நான்கில் மூன்று பங்கு | முக்கால் |
| 1 | ஒன்று | ஒன்று |
- எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை இருக்கும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
| எண் | ஒலிப்புச் சொல் |
|---|---|
| 1 | ஒன்று (ஏகம்) |
| 10 | பத்து |
| 100 | நூறு |
| 1000 | ஆயிரம்(சகசிரம்) |
| 10,000 | பதினாயிரம்(ஆயுதம்) |
| 1,00,000 | நூறாயிரம்(லட்சம் - நியுதம்) |
| 10,00,000 | பத்து நூறாயிரம் |
| 1,00,00,000 | கோடி |
| 10,00,00,000 | அற்புதம் |
| 1,00,00,00,000 | நிகற்புதம் |
| 10,00,00,00,000 | கும்பம் |
| 1,00,00,00,00,000 | கணம் |
| 10,00,00,00,00,000 | கற்பம் |
| 1,00,00,00,00,00,000 | நிகற்பம் |
| 10,00,00,00,00,00,000 | பதுமம் |
| 1,00,00,00,00,00,00,000 | சங்கம் |
| 10,00,00,00,00,00,00,000 | வெள்ளம்(சமுத்திரம்) |
| 1,00,00,00,00,00,00,00,000 | அந்நியம் |
| 10,00,00,00,00,00,00,00,000 | (அர்த்தம்) |
| 1,00,00,00,00,00,00,00,00,000 | பரார்த்தம் |
| 10,00,00,00,00,00,00,00,00,000 | பூரியம் |
| 1,00,00,00,00,00,00,00,00,00, | பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி) |
இன்னும் படிக்க
05 August 2011
நாகரிகமும் பண்பாடும் -பாவாணர்
எனது எழுத்துத் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலும்,தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சுய கட்டுரைகளை எழுத இயலா நிலையில் உள்ளேன்.தனித் தமிழறிஞர் மதிப்பிற்குரிய மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களின் இக்கட்டுரையை உங்கள் வாசிப்பிற்கு தருகிறேன்.படித்துப் பாருங்கள் பிடித்துப் போகும்.

நாகரிகமும் பண்பாடும்
நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை.அது எல்லாப் பொருட்களையும் தமக்கே பயன்படுத்துவது.பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம்.அது எல்லாப் பொருட்களையும் தமக்கும் பிறருக்கும் பயன்படுத்துவது.இலக்கணப் பிழையின்ர்ய்ப் பேசுவதும்,எல்லா வகையிலும் துப்புரவாயிருப்பதும்,காற்றோட்டமுள்ளதும், உடல் நலத்திற்கு ஏற்றதுமான வீட்டில் குடியிருப்பதும்,நன்றாய்ச் சமைத்து உண்பதும்,பிறருக்குத் தீங்கு செய்யாமையும் நாகரிகக் கூறுகளாம்.எளியாரிடத்தும் இனிதாகப் பேசுவதும்,புதிதாய் வந்த ஒழுக்கமுள்ள அயலாரை விருந்தோம்புவதும்,இரப்போர்க்கு இடுவதும்,இயன்றவரை பிறருக்கு உதவுவதும் பண்பாட்டுக் கூறுகளாம்.
சுருங்கச் சொல்லின் உள்ளத்தின் செம்மை பண்பாடும்,உள்ளத்திற்குப் புறம்பான உணவு, உடை,உறையுள் முதலியவற்றின் செம்மை நாகரிகமும் ஆகும்.ஆகவே,இவற்றை முறையே அகநாகரிகம்,புறநாகரிகம் எனக் கொள்ளினும் பொருந்தும்.
மாளிகையில் குடியிருப்பதும்,பட்டாடை அணிவதும்,அறுசுவை உண்டி உண்பதும்,இன்னியங்கியில் அல்லது புகைவண்டி முதர்வகுப்பிர் செல்வதும்,வேலைக்காரரை வைத்தாள்வதும்,பொறிகளைக்கொண்டு வினைசெய்வதும்,இன்பமாய்ப் போழுதுபோக்குவதும்,செல்வா வாழ்க்கையேயன்றி நாகரிக வாழ்க்கை யாகா.
நாகரிகத்தினும் உயர்ந்த நிலையே பண்பாடாயினும்,நாகரிகம் இன்றியும் பண்பாடுண்டு.காட்டில் தாங்கும் முற்றும் துறந்த முழுமுனிவர் ஆடையின்றியும் நீராடாதும் மண்ணில் இருப்பர்;ஆயினும்,அவர் பண்பாட்டில் தலைசிறந்தவராவர்.காவாது கரைந்து இனத்தோடு உண்ணும் காக்கையும்,வேலால் குத்தியவிடத்தும் வாலாட்டும் நன்ர்யுள்ள நாயும்,ஒரு காலத்தில் ஒரே பெடையோடு கூடி வாழும் வானப் பறவையினமும் நாகரிகமில்லா அஃறிணையாயினும் பண்பாட்டில் மக்களினும் விஞ்சியவையே.
Subscribe to:
Posts (Atom)