11 September 2011

தமிழ்ப் பழமொழிகள் -அ பகுதி-01

தமிழ்ப் பழமொழிகள் குறித்த தேடலில் இருந்தேன்.அதுசமயம் பரவலாக பல்வேறு பழமொழிகள் காணக்கிடைத்தன.நிரம்பக் கிடைத்துள்ளது.எனவே இப்பதிவில் 'அ"-வில் மட்டும்.பொறுமையாகப் படியுங்கள்.ஏதேனும் ஒரு கணம் உங்களுக்கு உதவலாம்.
பிழைகளோ,சேர்ப்புகளோ ,கருத்துகளோ இருப்பின் பதிவு செய்யுங்கள்.     

அ 

  1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  2. அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
  3. அகல இருந்தால் பகையும் உறவாம்.
  4. அகல உழுகிறதை விட ஆழ உழு.
  5. அகல் வட்டம் பகல் மழை.
  6. அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
  7. அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
  8. அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
  9. அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
  10. அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
  11. அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
  12. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
  13. அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
  14. அடக்கமே பெண்ணுக்கு அழகு.
  15. அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
  16. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
  17. அடாது செய்தவன் படாது படுவான்.
  18. அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்
  19. அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
  20. அடியாத மாடு படியாது.
  21. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
  22. அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
  23. அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.
  24. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
  25. அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
  26. அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
  27. அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
  28. அந்தி மழை அழுதாலும் விடாது.
  29. அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
  30. அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
  31. அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
  32. அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
  33. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
  34. அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
  35. அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.
  36. அரசு அன்று கொல்லும்,
  37. தெய்வம் நின்று கொல்லும்.
  38. அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
  39. அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
  40. அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது.
  41. அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
  42. அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
  43. அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.
  44. அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?
  45. அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
  46. அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.
  47. அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
  48. அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
  49. அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
  50. அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.
  51. அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.
  52. அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
  53. அவனவன் செய்த வினை அவனவனுக்கு.
  54. அவிசாரி என்று ஆனை மேல் போகலாம்
  55. திருடி என்று தெரு மேல் போக முடியுமா?
  56. அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்.
  57. அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.
  58. அழச் சொல்லுவார் தமர்,
  59. சிரிக்கச் சொல்லுவார் பிறர்.
  60. அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
  61. அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.
  62. அழுத பிள்ளை பால் குடிக்கும்.
  63. அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
  64. அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை.
  65. அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.
  66. அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
  67. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
  68. அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது.
  69. அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
  70. அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரி
  71. அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
  72. அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
  73. அறச் செட்டு முழு நட்டம்.
  74. அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
  75. அறமுறுக்கினால் அற்றுப் போகும்.
  76. அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
  77. அறிய அறியக் கெடுவார் உண்டா?
  78. அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
  79. அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
  80. அறிவீனனிடம் புத்தி கேட்காதே.
  81. அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
  82. அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
  83. அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.
  84. அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.
  85. அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
  86. அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?
  87. அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.
  88. அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
  89. அற்ப சகவாசம் பிராண சங்கடம்.
  90. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
  91. அற்றது பற்றெனில் உற்றது வீடு.
  92. அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
  93. அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
  94. அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
  95. அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.
  96. அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.
  97. அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
  98. அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

09 September 2011

தேவன்... 'மகா' தேவன்



நானே எழுதத்தான் ஆசை.
பணிகள் இருப்பதால்,
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


                                                              *******
முழுமையாகப் படியுங்கள்.பிழைகளோ,சேர்ப்புகளோ இருப்பின் பதிவு செய்யுங்கள்.
                                                              *******


தேவன் அல்லது ஆர். மகாதேவன் (செப்டம்பர் 8, 1913 - மே 5, 1957) பிரபல நகைச்சுவை எழுத்தாளர். பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். 


தமிழ் நாட்டில் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் செப்டம்பர் 8,1913 அன்று பிறந்தார்.



  அவ்வூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப்பள்ளியில் படித்தார். மகாதேவன், பள்ளியில் சாரணர் படையில் சேர்ந்திருந்ததால், சாரணப்படைத் தலைவராக இருந்த கோபாலசாமி ஐயங்கார், மாணவர்களுக்கு நிறைய சிறுகதைகளைச் சொல்லி, மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப்பார். இவர் மூலம் கதை கட்டுவதில் மகாதேவனுக்கு ஆர்வமும் சுவையும் தோன்றியது. 


கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.சிறிது காலம் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபின் தனது 21 வது வயதில் ஆனந்த விகடன் வார இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 


 1942 முதல் 1957 வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டுக் காலம் விகடனில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதினார்.


துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான பாத்திரப் படைப்பு; இது சின்னத் திரையில் தொடராக வந்திருக்கிறது.


கோமதியின் காதலன் திரைப்படமாக வெளியாயிற்று. இவர் எழுதிய மிஸ் ஜானகிமிஸ்டர் வேதாந்தம்ஜஸ்டிஸ் ஜகந்நாதன்கல்யாணிமைதிலிதுப்பறியும் சாம்பு முதலிய நாவல்கள், மேடை நாடகங்களாகவும் பல இடங்களில் நடிக்கப் பட்டன. 


மிஸ்டர் வேதாந்தம்ஸ்ரீமான் சுதர்சனம் இரண்டு நாவல்களும் இயக்குநர் ஸ்ரீதர் தயாரிப்பில் சின்னத்திரையிலும் வழங்கப்பட்டன.


நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய மிக விரிவான புதினம் ஜஸ்டிஸ் ஜகந்நாதன். இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.



50களில் இவர் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்ட போது எழுதிய ஐந்து நாடுகளில் அறுபது நாள் புத்தகமாக வெளியாகியுள்ளது.
ஜஸ்டிஸ் ஜகந்நாதன் புதினம், 1974 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.
தேவன் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இரு முறை பதவி வகித்திருக்கிறார்.

தேவனின் படைப்புகள்

புதினங்கள்

  • மைதிலி ( 1939 )                                                                                        
  • மாலதி ( 1942)
  • கோமதியின் காதலன்
  • துப்பறியும் சாம்பு (1942 )
  • கல்யாணி (1944)
  • மிஸ் ஜானகி
  • ஸ்ரீமான் சுதர்ஸனம்
  • மிஸ்டர் வேதாந்தம் (1949-50)
  • ஜஸ்டிஸ் ஜகந்நாதன் (1953-54)
  • லட்சுமி கடாட்சம் (1951-52)
  • ஸி.ஐ.டி. சந்துரு (1955-56)

பயணக் கட்டுரைகள்

  • நடந்தது நடந்தபடியே
  • ஐந்து நாடுகளில் அறுபது நாள்


கட்டுரை, கதைத் தொடர்கள்

  • மிஸ்டர் ராஜாமணி
  • விச்சுவுக்குக் கடிதங்கள்
  • அப்பளக் கச்சேரி
  • பெயர்போன புளுகுகள்
  • ராஜத்தின் மனோரதம்
  • கமலம் சொல்கிறாள்
  • ஸரஸுவுக்குக் கடிதங்கள்
  • போடாத தபால்
  • அதிசயத் தம்பதிகள்
  • கண்ணன் கட்டுரைகள்
  • ராஜியின் பிள்ளை
  • மல்லாரி ராவ் கதைகள்
  • சின்னஞ் சிறுகதைகள்
  • பிரபுவே! உத்தரவு
தொகுப்புகள், சிறுகதைகள்
  • ஏன் இந்த அசட்டுத்தனம்
  • பார்வதியின் சங்கல்பம்
  • சீனுப்பயல்
  • மனித சுபாவம்
  • பல்லிசாமியின் துப்பு
  • ஜாங்கிரி சுந்தரம்
  • போக்கிரி மாமா
  • ரங்கூன் பெரியப்பா
  • சொன்னபடி கேளுங்கள்
  • மோட்டார் அகராதி
அல்லையன்ஸ் பதிப்பகம் தேவனின் பல படைப்புகளை வெளியிட்டுள்ளது. கிழக்குப் பதிப்பகமும் தேவனின் பல நூல்களைச் செம்பதிப்புகளாக வெளியிட்டுள்ளது.

தேவனைப் பற்றி 






"ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில், தமிழ்நாடெங்கும் பிரசித்தமாகிவிட்டார் தேவன். முதன் முதலில் கையெழுத்துப் பிரதியில் அவர் கட்டுரையைப் படித்தபோது, இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்க்கையை எழுதும் இந்த ஆசாமி யார் என்று வியப்படைந்தேன். இவரோ, இன்னும் இருபது வயது நிரம்பாத இளைஞர் என்று அறிந்தபோது அளவிலாத மகிழ்ச்சி உண்டாயிற்று. குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும், துக்கங்களையும் மட்டுமல்ல, வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக் கூடியவர் தேவன்"
                                                                                                                                                                                                                                                 - கல்கி












28 August 2011

ஸ்டீவ் ஜாப்ஸ்:சி.இ.ஓ.க்களுக்கு முன்மாதிரி...

ஆக.25,2011 அன்று சிலிகான் வேலியில் கால்பதித்து தொழில்நுட்ப செயற்களங்களில் (Technology Arena) புரட்சியை ஏற்படுத்தியவரும், ஆப்பிள் நிறுவனத்தின் முன்னோடியுமான ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமை பொறுப்புகளில் இருந்து விடைபெற்றார்.



FILE - This 1977 file photo shows Apple Computer Inc. founder Steve Jobs as he introduces the new Apple II computer in Cupertino, Calif. Apple Inc. on Wednesday, Aug. 24, 2011 said Jobs is resigning a


FILE - In this Jan. 24, 1984 file photo, Steve Jobs, chairman of the board of Apple Computer, leans on the new Macintosh personal computer following a shareholder's meeting in Cupertino, Ca.  Appl
கடந்த சில ஆண்டுகளாக கணையப் புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் 56 வயது ஸ்டீவ் ஜாப்ஸ்,  ஜனவரி முதல் மருத்துவ விடுமுறையில் இருந்து வந்தார். இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து அவர் விலகினார். உடனடியாக, அந்தப் பதவியை டிம் குக் ஏற்றுக்கொண்டார்.

FILE - In this April 24, 1984 file photo, Steve Jobs, left, chairman of Apple Computers, John Sculley, center, then president and CEO, and Steve Wozniak, co-founder of Apple, unveil the new Apple IIc  
தனது கல்லூரிப் படிப்பை பாதியிலே விட்ட ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை 1970-ல் தொடங்கினார். 

FILE - This 1998 file photo provided by Apple shows Apple CEO Steve Jobs holding an iMac computer. Apple Inc. on Wednesday, Aug. 24, 2011 said Jobs is resigning as CEO, effective immediately. He will
1980 காலகட்டங்களில் இந்நிறுவனம் தயாரித்த மேக் கணினிகள் (Macintosh Computers) பிரபலம் அடைந்தன. 1985-ல்  தனது தொழில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட பிரச்னைகளால் நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.

apple-steve-jobs-250811-02
மீண்டும் 1997-ல் ஐமேக் (iMac) என்ற புதிய கண்டுபபிடிப்பு மூலம் அவர் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தை புதுப்பித்தார்.

apple-steve-jobs-250811-03

apple-steve-jobs-250811-05


apple-steve-jobs-250811-01
கடந்த 2002-ல் ஐபாடு (iPod) என்ற வெளியீட்டின் வாயிலாக தொழில்நுட்பத்துறையில் புதுமையான புரட்சியினை ஏற்படுத்தினார். ஐபோன் (iPhone) எனும் புதிய படைப்பைத் தொடர்ந்து, நுண்ணறி பேசி (Smart Phone) சந்தையிலும் ஆப்பிள் நிறுவனம் கால்பதித்தது. 

apple-steve-jobs-250811-04

FILE - In this Jan. 15, 2008 file photo, Apple CEO Steve Jobs holds up the MacBook Air after his keynote at the MacWorld Conference in San Francisco. Apple Inc. on Wednesday, Aug. 24, 2011 said Jobs i
காலப்போக்கில் ஆப்பிள் தன் ஐபோன்களில் பல பதிப்புகளை (Versions) வெளியிட்டு தொழில்நுட்பச் சந்தையில் லாபம் கண்டது மட்டுமின்றி மகத்தான சாதனையும் படைத்தது.

Apple CEO Steve Jobs announces the price for the new Apple TV at a news conference in San Francisco, Wednesday, Sept. 1, 2010. (AP Photo/Paul Sakuma)

Apple CEO Steve Jobs discusses the features of the new Apple iPod Nano at a news conference in San Francisco, Wednesday, Sept. 1, 2010. (AP Photo/Paul Sakuma)

FILE - In this file photo taken Jan. 27, 2010 file photo, Apple CEO Steve Jobs stands in front of a  photo of himself, right, and Steve Wozniak, left,  during an Apple event in San Francisco. Apple In

Combination file photos of Apple Inc CEO Steve Jobs

FILE - In this Jan. 9, 2007 file photo, Apple CEO Steve Jobs unveils the new AppleTV and iPhone during his keynote address at MacWorld Conference & Expo in San Francisco. Apple Inc. on Wednesday, Aug.


 

சி.இ.ஓ.க்களுக்கு முன்மாதிரி...
ஆப்பிள் நிறுவனத்தின் அதீத வளர்ச்சிக்குகாரணகர்த்தாவாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினாலும், அந்த இடத்துக்கு ஆப்பிள் நிறுவனத்தின் மற்றொரு முன்னோடியான டிம் குக் வருவதால் அதிக பாதிப்பு இருக்காது என்பது பரலவான கணிப்பு.
மேலும் படங்கள்,தகவல்களுக்கு.கிளிக் செய்க.

நன்றி:
yahoo.in
vikatan.com