04 December 2011

பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை


கனத்த கவிதை !


பார்ட்டிக்கு போனேன் அம்மா
நீ சொன்னதை மறக்கவே இல்லை
குடிக்க வேண்டாம் என்று சொன்னாய் என்று
சோடா மட்டும் குடித்துக் கொண்டேன்


நீ சொன்னதை போலவே அம்மா ,
பெருமையாய் இருந்தது எனக்கு.
குடித்து விட்டு ஓட்டவில்லை அம்மா
செய் ,என்று பிறர் தூண்டிய போதும்


சரியாகவே செய்தேன் தெரியும் அம்மா,
நீ சரியாகவே சொல்வாய்,அதுவும் தெரியும்
பார்ட்டி முடிந்து கொண்டிருக்கிறது அம்மா
எல்லாரும் கலைந்து கொண்டிருக்கிறார்கள்


காருக்குள் ஏறும் போது தெரியும் அம்மா,
பத்திரமாய் வந்து சேர்வேன் என்று
பொறுப்பும் அன்பும் சொல்லி
எனை நீ வளர்த்தது அப்படி அம்மாஓட்டத் துவங்கிவிட்டேன் அம்மா,
ஆனால் சாலைக்குள் வந்த போது
அடுத்த கார் என்னை கவனிக்காமல்
இடியாக மோதிக் கடந்தது


ரோட்டோரம் கிடந்த போது அம்மா
போலீஸார் பேசிக் கொண்டார் ,
"அடுத்த காரிலிருந்தவன் குடித்திருக்கிறான் "
ஆனால் விலை கொடுக்கப்போவது நான்தான்


நான் இறந்து கொண்டிருக்கிறேன் அம்மா
நீசீக்கிரம்வரமாட்டாயாஎன்றுஏங்கிக்கொண்டே..
இது எப்படி எனக்கு நடக்கலாம் அம்மா ?
வெறும்பலூனைப்போல்வெடித்ததுஎன்வாழ்க்கை


எனை சுற்றிலும் எங்கும் ரத்தம் அம்மா,
அதில் அதிகம் என்னுடையது தான் .
டாக்டர் சொன்னதை கேட்டேன் அம்மா
சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன்.


இதை மட்டும் உன்னிடம் சொல்ல வேண்டும்அம்மா,
நான் சத்தியமாக குடிக்கவில்லை .
அவர்கள் குடித்திருந்தார்கள் அம்மா
அவர்கள் எதையும் நினைக்கவில்லை


நான்போனபார்ட்டிக்கேகூடஅவனும்வந்திருக்கக் கூடும்
ஒரே ஓர் வித்தியாசம் தான்
அவன் குடித்தான்
நான் இறக்கப் போகிறேன் .


எதற்காக குடிக்கிறார்கள் அம்மா?
வாழ்க்கை வீணாக போகக் கூடுமே.
அம்மா, வலிகள் உணர்கிறேன் இந்நேரம் ,
கத்திப் போல் கூர்மையாக


என்னைமோதியவன்நடந்துகொண்டிருக்கிறான் அம்மா
இது கொஞ்சமும் நியாயமில்லை
இங்கே நான் இறந்து கொண்டிருக்கிறேன்
வெறித்துப்பார்க்கிறான் அவன், வேறு என்னசெய்ய முடியும்


தம்பியை அழ வேண்டாம்என்றுசொல்லுங்கள் அம்மா,
அப்பாவை தைரியமாக இருக்கசொல்லுங்கள் .
நான் சொர்க்கம் சேர்ந்த பின்னால்
"நல்ல பையன்" என்று என்கல்லறையில் எழுதி வையுங்கள்.


எவரேனும்அவனுக்குசொல்லியிருக்கவேண்டும் அம்மா
குடித்து விட்டு ஓட்ட வேண்டாம் என்று
எவரேனும் சொல்லிமட்டுமிருந்தால் அம்மா
நான் இன்னமும் உன் மகனாயிருந்திருப்பேன்


என் மூச்சடைக்கிறது அம்மா
ரொம்ப பயமாய் இருக்கிறது
எனக்காக அழாதே அம்மா..
எனக்காக எப்போதும் நீ இருந்தாய் ...

ஒரே ஒரு கேள்வி தான் அம்மா
நான் விடை பெற்றுக் கொள்ளும் முன்னால்
குடித்துவிட்டு ஒட்டியது நானில்லை
இறப்பது மட்டும் ஏன் நானாகவேண்டும் ?

தமிழில் : பூங்குழலி
நன்றி-http://www.eegarai.net/

23 November 2011

சுஜாதாவின் டில்லி பயணம்

ஒவ்வொரு வருஷமும் டில்லி மாறுகிறது.அதிகாலை புகைப்படலம் அதிகமாகி இருக்கிறது.கட்டிடங்கள் உயர்ந்திருக்கின்றன.முன்பெல்லாம் குளிரில் பிளாட்பாரத்தில் சேலத்து சிறுமிகள் தூங்குவார்கள்.இப்போது அவர்கள் தங்கைகளும் உடன் தூங்குகிறார்கள்.
                                                                                  
           நீ பிரபலமாயிருக்கிறாய்.அதனால் உன்னால் இலக்கியம் படைக்க முடியாது.-சுஜாதா அடிக்கடி எதிர்கொள்ளும் சித்தாந்தம்.
        
குளிர் எலும்பைத் தொடுகிறது. ஆரம்பத்தில் குறிப்பிட்ட புகைப்படலம் நகரத்தைக் கவ்வுகிறது.அந்தச் சேலத்துச் சிறுமி சாக்குப் பையைத் தன்மேல் சுற்றிக் கொண்டு தன் தங்கச்சியையும் அணைத்துக் கொண்டு மரத்தடியில் தூங்குவதற்கு ஆயத்தம் செய்கிறாள்.இலக்கியம் என்பதே ஒரு தேவையில்லாத சமாச்சாரமாகப்படுகிறது அப்போது.எல்லாக்கதைகளையும்,கவிதைகளையும் எரித்து அவளைச் சூடு பண்ண வேண்டும் போலிருக்கிறது.


-"கணையாழி"யில் சுஜாதா எழுதிய கட்டுரை சுருக்கமாக இங்கே. 
*-தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. 

29 October 2011

தமிழில் எண் குறிகள்



தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.
0123456789101001000

எண் ஒலிப்பு

  • ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் சொற்களும் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
எண்அளவுசொல்
1/320320 ல் ஒரு பங்குமுந்திரி
1/160160 ல் ஒரு பங்குஅரைக்காணி
3/320320 ல் மூன்று பங்கு அரைக்காணி முந்திரி
1/8080 ல் ஒரு பங்குகாணி
1/6464 ல் ஒரு பங்குகால் வீசம்
1/4040 ல் ஒரு பங்குஅரைமா
1/3232 ல் ஒரு பங்குஅரை வீசம்
3/8080 ல் மூன்று பங்குமுக்காணி
3/6464 ல் மூன்று பங்குமுக்கால் வீசம்
1/2020 ஒரு பங்கு ஒருமா
1/1616 ல் ஒரு பங்குமாகாணி (வீசம்)
1/1010 ல் ஒரு பங்குஇருமா
1/88 ல் ஒரு பங்குஅரைக்கால்
3/20 20 ல் மூன்று பங்குமூன்றுமா
3/1616 ல் மூன்று பங்குமூன்று வீசம்
1/5ஐந்தில் ஒரு பங்குநாலுமா
1/4நான்கில் ஒரு பங்கு கால்
1/2இரண்டில் ஒரு பங்குஅரை
3/4நான்கில் மூன்று பங்குமுக்கால்
1ஒன்றுஒன்று
  • எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை இருக்கும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
எண்ஒலிப்புச் சொல்
1ஒன்று (ஏகம்)
10பத்து
100நூறு
1000ஆயிரம்(சகசிரம்)
10,000 பதினாயிரம்(ஆயுதம்)
1,00,000நூறாயிரம்(லட்சம் - நியுதம்)
10,00,000பத்து நூறாயிரம்
1,00,00,000கோடி
10,00,00,000அற்புதம்
1,00,00,00,000நிகற்புதம்
10,00,00,00,000கும்பம்
1,00,00,00,00,000கணம்
10,00,00,00,00,000கற்பம்
1,00,00,00,00,00,000 நிகற்பம்
10,00,00,00,00,00,000பதுமம்
1,00,00,00,00,00,00,000சங்கம்
10,00,00,00,00,00,00,000வெள்ளம்(சமுத்திரம்)
1,00,00,00,00,00,00,00,000 அந்நியம்
10,00,00,00,00,00,00,00,000(அர்த்தம்)
1,00,00,00,00,00,00,00,00,000பரார்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,000பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)


இன்னும் படிக்க