05 August 2011

நாகரிகமும் பண்பாடும் -பாவாணர்


 எனது எழுத்துத் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலும்,தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சுய கட்டுரைகளை எழுத இயலா நிலையில் உள்ளேன்.தனித் தமிழறிஞர் மதிப்பிற்குரிய மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களின் இக்கட்டுரையை உங்கள் வாசிப்பிற்கு தருகிறேன்.படித்துப் பாருங்கள் பிடித்துப் போகும். 
                   
 நாகரிகமும் பண்பாடும் 


நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை.அது எல்லாப் பொருட்களையும் தமக்கே பயன்படுத்துவது.பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம்.அது எல்லாப் பொருட்களையும் தமக்கும் பிறருக்கும் பயன்படுத்துவது.இலக்கணப் பிழையின்ர்ய்ப் பேசுவதும்,எல்லா வகையிலும் துப்புரவாயிருப்பதும்,காற்றோட்டமுள்ளதும், உடல் நலத்திற்கு ஏற்றதுமான வீட்டில் குடியிருப்பதும்,நன்றாய்ச் சமைத்து உண்பதும்,பிறருக்குத் தீங்கு செய்யாமையும் நாகரிகக் கூறுகளாம்.எளியாரிடத்தும் இனிதாகப் பேசுவதும்,புதிதாய் வந்த ஒழுக்கமுள்ள அயலாரை விருந்தோம்புவதும்,இரப்போர்க்கு இடுவதும்,இயன்றவரை பிறருக்கு உதவுவதும் பண்பாட்டுக் கூறுகளாம். 
                                                       சுருங்கச் சொல்லின் உள்ளத்தின் செம்மை பண்பாடும்,உள்ளத்திற்குப் புறம்பான உணவு, உடை,உறையுள் முதலியவற்றின் செம்மை நாகரிகமும் ஆகும்.ஆகவே,இவற்றை முறையே அகநாகரிகம்,புறநாகரிகம் எனக் கொள்ளினும் பொருந்தும்.
                                                        மாளிகையில் குடியிருப்பதும்,பட்டாடை அணிவதும்,அறுசுவை உண்டி உண்பதும்,இன்னியங்கியில் அல்லது புகைவண்டி முதர்வகுப்பிர் செல்வதும்,வேலைக்காரரை வைத்தாள்வதும்,பொறிகளைக்கொண்டு  வினைசெய்வதும்,இன்பமாய்ப் போழுதுபோக்குவதும்,செல்வா வாழ்க்கையேயன்றி  நாகரிக வாழ்க்கை யாகா.
நாகரிகத்தினும் உயர்ந்த நிலையே பண்பாடாயினும்,நாகரிகம் இன்றியும் பண்பாடுண்டு.காட்டில் தாங்கும் முற்றும் துறந்த முழுமுனிவர் ஆடையின்றியும் நீராடாதும் மண்ணில் இருப்பர்;ஆயினும்,அவர் பண்பாட்டில் தலைசிறந்தவராவர்.காவாது கரைந்து இனத்தோடு உண்ணும் காக்கையும்,வேலால் குத்தியவிடத்தும் வாலாட்டும் நன்ர்யுள்ள நாயும்,ஒரு காலத்தில் ஒரே பெடையோடு கூடி வாழும் வானப் பறவையினமும் நாகரிகமில்லா அஃறிணையாயினும் பண்பாட்டில் மக்களினும் விஞ்சியவையே.

No comments:

Post a Comment