04 November 2012

மற்றுமோர் புதிய தளம்!

உலகில் உள்ள உயிர்களையெல்லாம் இசையச் செய்வதால்தான் அது இசை. இசை என்பது சிரிப்பையும், அழுகையும் போல உலகை வசப்படுத்தக் கூடிய அனுபவம். உள்ளத்தையும் வசப்படுத்தக்கூடியது. உங்களைப் போல நாங்களும் வசப்பட்டோம். பரவசப்பட்டோம். உங்களுக்கும் அதே உணர்ச்சியை, அனுபவத்தை பகிர்ந்து பன்மடங்காக்கி  தர முயற்சிப்பதுதான், இந்த தளத்தின் அடி நாதம்!

தமிழ்ப் பாடல்வரிகளைத் தமிழிலேயேத் தரவும், விவாதிக்கவும் ஒரு தளம். வந்து பாருங்கள். ஆதரவு தாருங்கள்.
 ஆதரவுகளை எதிர்நோக்கி உள்ளோம்.
மேலும் படிக்க: http://isaipaa.wordpress.com

16 October 2012

தற்காலிக நிறுத்தம்

எனது தளம் சில நிர்வாக மற்றும் தனிப்பட்ட காரணங்களால் வேர்ட்பிரஸ் தளத்தில் இயங்கி வருகிறது. மேலும் படிக்க http://thamizhg.wordpress.com/ -க்கு வருகை தாருங்கள்.
இத்தளம் விரைவில் இயங்கும்.
தவறுகளுக்கும், தடங்கலுக்கும் வருந்துகிறோம்.

07 August 2012

ஈஃபிள் கோபுரம் •  முதலாம் உலகப் போரின்போது (1914-1918) பாரிஸ் நகரில் கிளிகள் மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட்டன. ஈபிள் கோபுரத்தில் வைக்கப்பட்ட அந்த கிளிகள், தங்களின் சிறப்பான கேட்புத்திறன் மூலமாக வெகு தூரத்தில் எதிர்நாட்டு விமானங்கள் வரும்போதே சத்தம் எழுப்பி பாரிஸ் நகர மக்களை எச்சரித்தன. • 19-ம் நூற்றாண்டில், பிரெஞ்சு எழுத்தாளர்களான  கை டி மாப்பசந்தும், எமிலி ஸோலாவும் சேர்ந்து ஈபிள் கோபுரம் அசிங்கமாக நின்றுகொண்டிருப்பதாகப் பிரச்சாரம் செய்தனர்.மேலும் அது பயனேதுமில்லாமல் பூதாகரமாக நிற்பதாகவும், அது பிரெஞ்சு கலைப் பண்பாட்டைப் பாதிப்பதாகவும், எனவே அதை அகற்ற வேண்டும் என அரசிற்கு மனு அனுப்பினர். • ஈபிள் கோபுரத்தை மிகவும் வெறுத்த கை டி மாப்பசந்த், தினமும் ஈபிள் கோபுரத்தில் உள்ள உணவகத்தில் உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதற்கு அவர் கூறிய காரணம், ‘பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரம் தெரியாத ஒரே இடம் இதுதான்’ என்பதுதான்!

22 March 2012

புதிய முயற்சி


புதிய முயற்சி. புதிய பரிமாணம்.
சென்று பாருங்கள்.--->      


தமிழின் பெருமை ---> 


தொடர்ந்து  இந்த தளமும் இயங்கும். தங்கள்  ஆதரவு அங்கும் தொடர விரும்பி 
                                                                                                                 அன்பன் 
                                                                                                                  தமிழ் 

25 February 2012

சங்ககால விளையாட்டுகள்


 1. அக்குளுத்தல் – arm-pit game
 2. அலவன் ஆட்டல் – play with crabs
 3. அன்புப்போர் – lovers'sulks
 4. உடல்வித்தை – gymnastics
 5. உழலை – peg and hole
 6. ஊசல் - swing
 7. ஊதல் (சங்ககாலம்) – blowing
 8. ஊன்றித் தாண்டல் pole vault
 9. எண்ணல் விளையாட்டு – counting game
 10. எழில் விளையாட்டு – gody building
 11. ஏறுகோள் (ஆயர் விளையாட்டு) – bull-fight
 12. ஒளிதல் விளையாட்டு - hide and seek
 13. ஓடியாடல் - touch me
 14. ஓரை – sea or shore touch-game
 15. கட்டு (குறிவிளையாட்டு) – marbles rolling (witch watch game)
 16. கண்புதை விளையாட்டு – eye-binding game
 17. கவண் – sling
 18. கவணை – tree-branch sling
 19. கவறு – odd or even game
 20. கழங்கு (மகளிர் விளையாட்டு) – marbles rolling (maiden game)
 21. கழங்கு (வேலன் விளையாட்டு) - witch watch game
 22. களவுக்காய் – black-marbles
 23. களிநீர் விளையாட்டு – river-bath festive
 24. கன்னம் தூக்கல் – rope-swing
 25. காய்மறை – nut hiding in sand notch
 26. குத்துச்சண்டை – boxing
 27. குரவை – hand-binding dance
 28. குளிர் – rolling instrument playing
 29. குறும்பூழ்ச்சண்டை watch the Indian-kiwi-bird fight
 30. கையெறி – love-punch
 31. கோழிச்சண்டை – watch the cock-fight
 32. சிற்றில் – parent-like play
 33. சிறுபாடு – time-pass game
 34. சூது – marble-gambling
 35. செதுமொழி – word purifying
 36. தகர்ச்சண்டை watch the sheep-fight
 37. தட்டை - flopping instrument playing
 38. தழல் – fire roll
 39. தழூஉ – waist-binding dance
 40. தழை – leaves weaving
 41. துணங்கை – arm-binding dance
 42. தெள்விளி (மகளிர்) – tongue whistle
 43. தெள்விளி (ஆடவர்) - whistle-music
 44. தெற்றி – marble-scattering
 45. தைந்நீராடல் – bathing-festive in January
 46. தொழிற்பாடல் – toil song
 47. நீச்சல் நடனம் – synchronized swimming
 48. நீச்சல் பந்து – water-polo
 49. படகு – பின்படகு – rowing
 50. படகு – முன்படகு – canoeing
 51. படகு – வளிப்படகு – wind-surfing
 52. பண்ணை (விளையாட்டு)– woman-diving
 53. பந்து – juggling balls
 54. பறை – drum play
 55. பாய்ச்சல் – man-diving
 56. பாவை – sand or flower toy
 57. பிணையூபம் - pyramid
 58. புதுமொழி – word building
 59. புதைமுகம் – face-mask
 60. புனலாடல் – swimming in falls-pit
 61. பூ – flower gathering
 62. பொய்தல் – hide and seek
 63. போறல் – imitating-games
 64. மதிமொழி – word recalling
 65. மரம் – ஏறல் – climb on tree and touch
 66. மரம் – வளர்த்தல் – plantation games
 67. மற்போர் – wrestling
 68. மிதவை – boating
 69. முக்கால் சிறுதேர் – toy-cart
 70. முதுமொழி – proverb collection
 71. மூழ்கல் – plunging game
 72. யானைப்போர் – watch the elephant-fight
 73. யானையேற்றம் – elephant-riding
 74. வட்டு – hard balls
 75. வட்டு – ஈங்கைவட்டு – give and take marbles
 76. வட்டு – ஈட்டுவட்டு – gathering marbles
 77. வட்டு – உருட்டுவட்டு – rolling marbles
 78. வட்டு – கைகரப்புவட்டு – steeling dies
 79. வட்டு – கையாடுவட்டு – marble throwing
 80. வட்டு – கோட்டுவட்டு – marble throwing in a spot
 81. வட்டு – சூதுவட்டு – gambling dies
 82. வட்டு – நீர்வட்டு – water-ball
 83. வட்டு – நெல்லிவட்டு – marble of emblic myrobalam
 84. வட்டு – மணிவட்டு - குணில் – hockey stick
 85. வட்டு – மழைத்துளி-வட்டு
 86. வட்டுநா – golf
 87. வண்டல் – round-run with clubbing hands to others
 88. வண்டல் – வண்டற்பாவை - round-run with clubbing hands to others placing a clay-made toy in the middle
 89. வல்லு – வல்லநாய் – dog-coins move to bind the tiger-coin
 90. வல்லு (சூது) – dice-gambling
 91. வில் – வல்வில் வேட்டம் archery
 92. வில் – வலார் வில் – boy’s archery
 93. வீளை - mouth whistle
 94. வேடம் – fancy-dress

31 January 2012

#2 பரிந்துரை-10

'சாகடிக்கப்படலாம்... நாங்கள் - தோற்கடிக்கப்படமாட்டோம்' என சுளீர் வரிகளால் இலக்கியம் படைத்துவரும் கவிஞர் ஆனந்தன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்.

1. தாய் - மார்க்சிம் கார்க்கி

2. டேல் ஆப் டூ சிட்டீஸ் - சார்லஸ் டிக்கன்ஸ்

3. கல்கியின் சிவகாமி சபதம்

4. சித்திரப்பாவை - அகிலன்

5. அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்

6. புலமைப்பித்தனின் முழு சிறுகதைக் தொகுப்புகள்

7. ஜெயமோகனின் சிறுகதைக் தொகுப்புகள்

8. தோணி - வ.அ.ராசரத்தினம்

9. நனவிடை தோய்தல் - எஸ்.பொ.

10. ஓ.ஹென்றியின் சிறுகதைகள்
                                                        -இன்னும் வரும் 
நன்றி-vikatan.com

#1 பரிந்துரை-10


'தீதும் நன்றும்' மூலம் வெகுவாக கவனத்தை ஈர்த்தவரும், 'சூடிய பூ சூடற்க' நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள புத்தகம், 'பனுவல் போற்றுதும்'.

சென்னைப் புத்தகக் காட்சியில், வாசகர்கள் வாங்கிய தமது புத்தகங்களில் கையெழுத்திட்டு, அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தவரிடம், 10 புத்தங்களைப் பரிந்துரைக்கக் கேட்டபோது, நிதானமாக எழுதித் தந்த பட்டியல் இது...

1. அறம் - ஜெயமோகன்

2. காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்

3. நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்   

4. ஆழிசூழ் உலகு - ஜோடிகுரூஸ்

5. வண்ண நிலவன் கதைகள் - சந்தியா பதிப்பகம்

6. தாயார் சந்நிதி - சுகா

7. கலங்கிய நதி - பி.ஏ.கிருஷ்ணன்

8. ஆறாவடு - சயந்தன்

9. போரும் வாழ்வும் - தால்ஸ்தோய்

10. அசடன் - தாஸ்தாவஸ்கி

                                                              -இன்னும் வரும் 

நன்றி:vikatan.com

15 January 2012

புதுமை பொங்குக!!! -பேரறிஞர்ஞாயிறன்று பொங்கல்! அதனைத் தமிழர் திருநாளெனக் கொண்டு போற்றி வாழுபவர். தமிழரெல்லோருக்கும் நாம் பொங்கல் வாழ்த்து அனுப்பக் கடமைப்பட்டுள்ளோம். அனுப்புகிறோம் அன்புடன். தமிழர் வாழ்வே, நம் வாழ்வு எனக் கொண்டு பணியாற்றி, தமிழ் வாழத் தமிழர் வாழ்வர், தமிழர் வாழத் தமிழ்நாடு தழைக்கும் எனக்கூறி அதற்கெனப் பாடுபடும் நாம் தமிழரின் திருநாளன்று நமது அன்பு மொழியைத் தமிழர் இல்லந்தோறும் அனுப்பித் தமிழர் உள்ளமெல்லாம் செல்லச் செய்ய அவாவுகிறோம்.
தமிழரின் களிப்பைக் கண்ணாரக் கண்டால், வேண்டிய காட்சியைக் கண்டு தீர்ந்துவிட்டது என்று உள்ளூர எண்ணும் நாம், இவ்வாண்டுப் பொங்கற் புதுநாளன்று பொன், மணி தர முன்வரவில்லை! தமிழர் அதனை நாடார்; தேடார்; பிறர் கைநோக்கி நிற்கார்; ஆனால், நாம் நமது அன்பையே பொங்கல் வாழ்த்தாகத் தருகிறோம்.
சென்ற ஆண்டும் பொங்கல் வந்தது. இவ்வாண்டு வருவது போன்றே! ஆண்டுதோறுந்தான் பொங்கல் வந்து போகிறது. அந்நாள் புனலில் குளித்து, புத்தாடை உடுத்தி, பூரித்த உள்ளத்
துடன், இல்லந்தோறும் இன்பத் தமிழரோடு, தமிழர் இருத்தலே முறை.
ஆனால், சென்ற ஆண்டு பொங்கலின்போது இன்பமா இருந்தது? இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டதற்காகக் காளைகளும், காரிகையரும் கடுஞ்சிறையில் கஞ்சியும் கூழும் உண்டு, கல் தரையில் படுத்துருண்டு, காய்ச்சலைத் தோழமை கொண்டு, கல் உடைத்து, கட்டைவெட்டி, நீர் மொண்டு நிலம் பெருக்கி, நிந்தை கேட்டுச் சிந்தை நொந்து வாழ்ந்தனர். அவர்கள் உள்ளம் உறுதிதான். ஆனால், திரேகம் அப்படியல்லவே! அவர்கள் பெற்றோரும், ‘பெறற்கரிய பேறு பெற்றான் எம் மகவு’ என்றுதான் உள்ளத்தில் கருதினர். ஆனால், தம்மனையில் பொங்கி, பொங்கற் புதுநாளன்று இருக்கவேண்டிய சிங்கமனையார், தமிழரைப் பங்கப் படுத்துவதையே தமது பணியெனக் கொண்டு வாழ்ந்த ஆட்சியினரின் – படுத்துவதையே தமது பணியெனக் கொண்டு வாழ்ந்த ஆட்சியினரின் கொடுஞ்செயலால், சிறைப்பட்டு, சோர்ந்து இருப்பதை எண்ணி, வாடினர்.
எத்தனை எத்தனை பிரிவுகள்! எங்கெங்கு வாட்டம்! இன்று எண்ணினாலும் ஏக்கமே வரும்.
அந்த ஆண்டு போயிற்று! அந்தப் பொங்கல் போய்விட்டது. இவ்வாண்டுப் பொங்கலில், இல்லம் தோறும் இன்பம் இருக்கவே மார்க்கம் கிடைத்தது.
ஆனால் இன்பம், பூரணமானதா? இல்லை! தமிழரின் இல்லங்களில், தமிழ் வாழ்வு பொங்குமா? இல்லை! தமிழ்நாட்டில் தமிழர் தழைக்கவா மார்க்கமிருக்கிறது! இல்லை! தமிழ்நாட்டில் தமிழர் வாழவா வழி பல இருக்கின்றன? இல்லை! இல்லை! ஆட்சி தமிழரிடமா? காணோம்! தமிழ்நாடு தமிழருக்கா? இல்லை! இப்போதுதான் அந்த மூலமந்திர முழக்கம் கிளம்பி இருக்கிறது. தமிழ்நாட்டில் இனி சாந்தி, சமாதானம், அமைதி, மனத்திருப்தி ஏற்படக் கூடிய விதத்திலே அரசியல் நடப்பு உள்ளதா? காணோம் அதுவும்!
எனவே, பூரணமான இன்பத்துக்கும் இடமில்லை இவ்வாண்டு. ஆனால், சென்ற ஆண்டு சிந்தை நொந்து வாழ்ந்ததைப் போல இருக்க வேண்டியதுமில்லை.
ஆனால், சென்ற ஆண்டுக்கு இவ்வாண்டு தமிழர் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதிலே சந்தேகமில்லை.
எங்கு நோக்கினும் தமிழர் வாழ்க! தமிழ் வெல்க! தமிழ்நாடு தமிழருக்கே! என்ற பேரொலி கேட்கிறோம்.
யாரைக் கேட்பினும் —“ஆம்! நான் தமிழனே!” எனப் புன்சிரிப்புடன் மார்தட்டிக் கொண்டு கூறக் கேட்கிறோம். நாள்தோ-றும் ஊர்தோறும் தமிழர் கூட்டங்கள், தமிழர் பரணி, தமிழர் முழக்கம் நடந்தபடி உள்ளன. தமிழரின் தலைவர் தமிழர் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டுவிட்டார். தமிழர் தம்மை உணரத் தொடங்கிவிட்டனர். தம்மவரைத் தழுவத் தொடங்கி விட்டனர். தம் நாட்டில் தமது மொழியைக் காக்கத் தொடங்கிவிட்டனர். தம் நாட்டில் பிறனுக்கு ஆதிக்கமேன் எனக் கேட்கத் துணிந்து விட்டனர். தம் நாட்டில் தாமே வாழவேண்டும். அரசு தமதே ஆட்சி தமதே எனக் கூற உறுதி கொண்டு விட்டனர். தமிழர் விடுதலைப் போரிட முனைந்து விட்டனர்.
எனவே, இவ்வாண்டு பொங்கலன்று வீடுதோறும் செந்நெல் மணி வாடையுடன் செந்தமிழின் மணமும் சேர்ந்து கமழும் என நம்புகிறோம்.
அந்த நம்பிக்கையே நமது இன்பத்துக்குக் காரணம்.
பொங்கல் புது நாளின் கருத்து மிக அழகியது. பொருள் ததும்புவது.
ஆரியர் கொண்டாடும் ஆபாசப் பண்டிகைபோல எதிரியை எப்படியோ வதைத்து விட்டதற்காகக் கொண்டாடும் நாளன்று! ஆரியர் பண்டிகை, வெறியாட்டம்! அவை சூதும் சூழ்ச்சியும் வீரத்தை வாட்டி வதைத்ததை விளக்கும் பண்டிகைகள்; பொங்கற் புதுநாள் அத்தகைமைத்தன்று.
பாடுபட்டால் பயன் உண்டு! உழைத்தால் வாழ்வுண்டு! என்ற மூலக் கொள்கைக்கு ஏற்ற நாள் அது.
காட்டைத் திருத்தி, நிலமாக்கி, மேட்டை அகற்றிக் குளமாக்கி, கரடுமுரடைப் போக்கி வாய்க்கால்களாக்கி, வயல்கள் பலவும் அமைத்து, வரப்புகள் தொகுத்து, உழுது நீர்பாய்ச்சி, களை எடுத்துக் காப்பாற்றி, முற்றிய கதிரை அறுத்து வந்து முற்றத்தில் கொட்டி, அளந்து எடுத்து ஆனந்தத்துக்கு அடிகோலும் நாளாகும் அந்நாள்.
உழைப்பின் பயன் இதுவென உணர்ந்து, மகிழ்ச்சி பொங்குகிறது என்பதை மனத்தில் இருத்த வேண்டி, பாற்பொங்கலிட்டு, “பொங்கலோ! பொங்கல்!” எனத் தீந்தமிழ் மொழி புகன்று, தித்திக்கும் பண்டமுண்டு திருநாள் கொண்டாடும் நாளாகும்.
அந்நாள், தமிழர் தமது உள்ளத்தில் ஒரு விஷயத்தை நினைவிலிறுத்துவர் என நம்புகிறோம்.
திருந்தாத வயலில் உழவு இல்லை. நம்நாடு திருந்தாத வயலாகவே இன்னமும் உள்ளது. எனவேதான் இங்குத் தன்னாட்சி முளைக்கவில்லை.
வரம்பு கட்டாவிடில் வயலுக்கு வயல் வம்பு வளரும். அஃதே போலத்தான், தமிழர் தம்நாட்டின் வரம்பு கட்டத் தவறி, அதாவது தமிழ்மொழி, கலை, மார்க்கம் ஆகியவை ஆரியத்தால் சிதைக்கப் படாதிருக்க வேண்டித் தன்மானம் எனும் வரம்பு கட்டத் தவறியதால் இன்று நமது நாடு பிறருக்கே சந்தையாகிவிட்டது.
உழுது நீர்ப்பாய்ச்சிக் களை எடுக்கா முன்னம், பச்சைப் பயிர் பார்க்க முடியுமா? செந்நெல் தேட இயலுமா? நாம் இங்கே நம் நாட்டுக் களைகளைப் போக்கினோமா! இல்லையே! அதோ தீண்டாமை எனும் கோரமான களை இருக்கிறது. பார்ப்பனியம் எனும் பண்டைப் பயங்கரப் பாசி அடிமுதல் நுனிவரை படர்ந்திருக்கிறது. பித்தலாட்டக் கொள்கைகள் எவ்வளவு! பாமரர் ஏய்க்கப்படுவது எத்துணை. குருட்டுக் கொள்கையும், முரட்டுப் பிடியும், வரட்டு வீரமும், கிழட்டுப் போக்கும், பகட்டுப் பேச்சும், இங்கேயுள்ள களைகள்! இவை போக்கப்படா முன்னம், பயிர் எது? இவற்றைக் களைவதன்றோ, பண்ணையில் அக்கரை கொண்டோரின் கடன்.
எனவே, இவ்வாண்டு பொங்கலன்று, தமிழர் உள்ளத்திலே புதுமை பொங்கவேண்டும். தமிழரின் வாழ்வுக்கு எதிரிடையாக உள்ளவை யாவும் மங்கும்படி செய்தல் வேண்டும்.
ஒன்று மங்கிவிட்டது. மறுபிறப்பு எடுக்க எண்ணுகிறது. எனினும், மீண்டும் வரினும், மிக விரைவில் பங்கப்பட்டுப் போகும் என்பதிலே சந்தேகமில்லை.
ஒழிந்து போன காங்கிரஸ் ஆட்சியைத்தான் நாம் குறிப்பிடுகிறோம்.
உழவரையே பெரிதும் ஏய்த்து ஒட்டுப்பெற்ற ஆட்சி உழவர் சார்பில் ஒரு சிறு நலனும் செய்யவில்லை.
வரி எல்லாம் போகும் என்று கூறியவர்கள், வரிபல போட்டு வாட்டினர். நிலவரிவஜா விஷயத்தில் ஏதோதோ கூறினர். ஏதும் செய்ய இயலவில்லை எனக் கூறிவிட்டுப் போயும் விட்டனர். பள்ளிகள் மூடினர். மருத்துவ சௌகரியத்தை மாய்த்தனர். பண்டங்களின் விலை ஏறும்படி விற்பனை வரிபோட்டு ஏழைகளை வாட்டினர். தொழிலாளர் துயரம் பெருகிற்று. வகுப்புக் கலவரம் வளர்ந்தது. தீண்டாதார் துயரம் அதிகரித்தது. அப்பா! அவர்கள் ஆட்சி! “இன்னும் எத்தனை நாள்?” இன்னும் எத்தனை நாள்?” என்று கேட்டபடி இருந்தனர் தமிழர். இன்று இல்லை அவர்கள்! ஒழிந்தது அந்த ஆட்சி! தீர்ந்தது அவர்களின் தர்பார்! நாடு பூராவும், அவர்கள் போனதற்குப் புலம்பவில்லை. பூரித்தது, விடுதலை விழாக் கோண்டாடி, “போனாயா, ஒழிந்தாயா” என்று கூறி விட்டது.
எனவே, தமிழருக்கு ஆபத்தாக வளர்ந்த ஆட்சி மங்கி மடிந்தது.
பொங்கற் புதுநாளன்று, இச்சிந்தனையொன்றே தமிழரின் செந்தேனாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அம்மட்டோ? அந்நாள், ‘இழந்த இடத்தை’ மீண்டும் பிடிக்க, எவ்வளவு இழிந்த செயலில் இறங்கவும் அவர்கள் இறங்கிவிட்டார்கள் என்பதை எண்ணி, அத்துடன், வந்த பதவியை வேண்டாம் எனக் கூறிய தமிழர் தலைவரின் தீரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழரின் நெஞ்சில் ஏன் துன்பம் பெருகாது எனக் கேட்கிறோம்.
அதோ அந்தக் கும்பல் இன்னமும் அலைந்து திரிகிறது அதிகாரத் துண்டுகளுக்கு. இதோ தமிழர் தலைவர், “எமக்கேன் இது, எமக்கு வேண்டியது தமிழ்நாடு” “தமிழ்நாடு தமிழருக்கே” என முழக்கம் செய்கிறார்.
ஆங்கிலக் கவி ஷேக்ஸ்பியர் கூறியபடி, “அந்தப் படத்தையும் பாருங்கள், இந்தப் படத்தையும் பாருங்கள்” என்று நாம் கூறுகிறோம்.
பொங்கற் புதுநாளன்று தமிழரின் மனக்கண் முன்பு இக்காட்சி தோன்றட்டும்.
தமிழ்நாட்டில் ஒற்றுமை பொங்குகிறது. தமிழரின் எதிரிகளின் கோட்டையில் புரட்சிச் சங்கமே ஓங்குகிறது.
தமிழர் கட்சியில், மேலும் மேலும் பலர் வந்து அணிவகுப்பில் நான் முன்னே நீ முன்னே என்று சேருகின்றனர். தமிழரின் எதிரிகளில், “போடாபோ, நரிமகனே எட்டிநில் நீ கவிழ்க்கப் பட்டாய்’ என்ற தண்டனைத் தாக்கீதுகள் பொங்கி வழிகின்றன.
காங்கிரஸ் ஆட்சி ஒழிந்ததற்குத் திருநாள் காந்தியார் வாழும் இடத்திலே நடந்தது. தமிழரின் தலைவர் பெரியார் தமிழ்நாட்டைத் தாண்டிச் சென்று, பம்பாய் மாகாணத்தில் தமிழர் இலட்சிய விளக்கம் செய்தார்.
“காங்கிரசிடம் நம்பிக்கை இல்லை, நாம் கூடி முடியாது, நம்பமாட்டோம்” என முஸ்லிம் லீகும், ஆதி திராவிடர்களும் கூறி விட்டனர். தமிழர் தலைவருடன் அளவளாவிப் பேசி, ஒத்துழைப்பதாக உறுதி கூறி, அகில இந்திய முஸ்லிம்லீக் தலைவர் ஜனாப் ஜின்னாவும், ஆதிதிராவிடப் பெருங்குடி மக்களின் அண்ணல் டாக்டர் அம்பேத்கரும் வாக்குக் கொடுத்தனர்.
புத்துலக வாழ்வுக்கு முட்டுக் கட்டையாக உள்ள காங்கிரஸ் என்னும் கூட்டத்தின் கொட்டத்தை அடக்க மூவரும் ஒன்று கூடியுள்ளனர்.
எனவே, தமிழருக்கு இனி இன்பம் பொங்க மார்க்கமேற்பட்டு விட்டது.
தமிழர்கள் யாவருக்கும் இனிப் புத்துலக வாழ்வு நிச்சயம். அதற்காகப் போரிட வேண்டும்; பாடுபட வேண்டும். களை எடுக்க வேண்டும். இக்கருத்தையே பெரிதும் உள்ளடக்கிய பொங்கற் புதுநாளன்று தமிழர்கள் உள்ளத்தில் இவ்வெண்ணங்கள் பொங்க வேண்டுமென விரும்புகிறோம்.
உமது இல்லந்தோறும், உள்ளம் தோறும் பொங்குக புதுமை என அன்புடன் வாழ்த்தி, உமது இன்பமே, எமது குறிக்கோள் என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்க தமிழர்!
வாழ்க தமிழ்நாடு!!
புதுமை பொங்குக!!!
தமிழ்நாடு தமிழருக்கே!!!!
(விடுதலை, 13-1-1940 ப.2)
-மீள்பதிவுக்கட்டுரை -பேரறிஞர் 'விடுதலை'-யில் எழுதியது.


05 January 2012


இன்னும் கொஞ்சம் சிரிக்க .....  முந்தின பதிவின் தொடர்ச்சி.
         **********************************


விக்கிப்பீடியா : எனக்கு எல்லாம் தெரியும்..

கூகுள் : என்னிடம் எல்லாம் உள்ளது..

முகபுத்தகம் : எனக்கு எல்லோரையும் தெரியும்..

இணையம் : நான் இல்லையென்றால் உங்களுக்கு இதெல்லாம் கிடையாது!!

மின்சாரம் : என்னங்கடா அங்க சத்தம்?????? 

-oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo-

நடத்துநர் : எல்லோரும் சீட்டு வாங்கியாச்சாப்பா...

பயணி : ஓட்டுநர் தூங்கிக்கிட்டு பேருந்தை ஓட்டுறதப் பார்த்தா எல்லோரும் மொத்தமா சீட்டு வாங்கியாச்சுன்னு தான் நினைக்கிறேன்.. 

-oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo-

மருத்துவர் : உங்களை முழுவதும் சோதனை செய்து பார்த்துட்டேன். உங்களுக்கு வந்த நோய் என்ன என்றே தெரியவில்லை!!


ஆமா புகையிலை போடற பழக்கம் உண்டா??


நோயாளி : எதுக்குங்கய்யா அதைக் கேட்கறீங்க..?
அஞ்சாறு ஏக்கரில புகையில தான் போட்டிருக்கேன்..

மருத்துவர் : !!!


-oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo-

நம்மாளு : ஐயா உங்க வங்கியில கல்விக் கடன் கொடுக்கறீங்கன்னு கேள்விப்பட்டேன் என் பையனுக்காக அதை வாங்கலாம்னு வந்தேங்க..

வங்கி மேலாளர் : ஆமா.. எவ்வளவு வேணும்..?          

நம்மாளு : ஐயா ஒரு இலட்சம் ரூபாய் போதுங்க..


வங்கி மேலாளர் : உங்க பையன் என்ன படிக்கிறான்.நம்மாளு : இப்பதாங்க எல்கேசில சேர்க்கபோறேன்...

வங்கி மேலாளர் : !!!!!


-oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo-


உங்களை காதலிச்ச பிறகுதான் மற்ற
ஆம்பிளைங்க எவ்வளவு மோசன்னு தெரியுது டார்லிங்!'
*****************************************


பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
******************************************************************************
"ஒருவழியா பேசித் தீர்த்துட்டேன்...."
"ஏதாவது பிரச்சினையா...?"
"ம்ஹும்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்...!"
*********************************************************************************
04 January 2012

சிரிக்க ஒரு பதிவு...


நகைச்சுவைப் பதிவுகள் பொதுவாக இடுவதில் விருப்பமில்லை.வித்தியாச-ரசனை கருதி சிரிப்பிற்கு சிறிது இடம் ஒதுக்குகிறேன். தொடர்ச்சியாக இந்த வரிசையில் சில பதிவுகள் வரலாம்.கூகிள் பிளஸ் அன்பர் M.S. Ramajanarthanan  அவர்களுக்கு நன்றிகள்.
                                                               ****************
நீ யாரோ ரெண்டு பேரோட ஊர் சுத்திட்டு

இருக்கியாமே ?'

'யாரோ உங்ககிட்டே ஒண்ணுக்கு ரெண்டா சொல்லியிருக்காங்க
                                                             *****************
அப்பா: உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது?

மகன்: நிலா மாதிரி!

அப்பா: நிலா மாதிரின்னா?

மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!!
                                                          *********************

கணவன் : தெருவுல ஒரு கருப்பு நாய்
செத்து கிடக்கே.. நீ எதாவது அதுக்கு
சாப்பாடு போட்டியா..?

மனைவி : நான் உங்களுக்கு மட்டும் தாங்க
சாப்பாடு போட்டேன்.. வேற எந்த நாய்க்கும்
சாப்பாடு போடலை..

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
அந்த காலத்துல குதிரையில வந்து
கொள்ளை அடிப்பாங்களே.. அந்த
கொள்ளைக்காரங்க எல்லாம் இப்பவும்
இருக்காங்களா..?

இருக்காங்க.. ஆனா அங்கே அங்கே
ஸ்கூல்., காலேஜ்னு கட்டி செட்டில்
ஆயிட்டாங்க..

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
நான் சந்திரமண்டலத்தில 4 ஏக்கர்
நிலம் வாங்கலாம்னு இருக்கேன்..

சந்திரமண்டலத்திலயா..? அங்கே
கரெண்ட்., ரோடு வசதி எல்லாம்
கிடையாதே..?!!

டேய் லூசு.. இங்கே மட்டும்
அதெல்லாம் எங்கடா இருக்கு..?

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
" மன்னா..!! எதிரி நம் மகாராணியை
கடத்த திட்டமிட்டு உள்ளான்.. "

" அவனுக்கு வேண்டிய சகல
உதவிகளையும் உடனே
செய்யுங்கள் அமைச்சரே..!! "

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
( டீச்சர் மாணவனிடம்.. )

யார் என்ன சொன்னாலும்
அப்படியே நம்பிடக்கூடாது
ஏன்.?, எதுக்கு..?, எப்படி..?-னு
கேக்கணும்..

" ஏன் கேக்கணும் டீச்சர்..?
எதுக்கு கேக்கணும் டீச்சர்..?
எப்படி கேக்கணும் டீச்சர்..? "
****************************
                                                                  -இன்னும் சிரிக்கலாம் அடுத்த பதிவில்.

03 January 2012

பனையும் அது தரும் பயன்களும்

பனை மரம் மனிதனின் எந்த முயற்சியும் இன்றி தானே இயற்கையாக வளர்ந்து மனிதனுக்கு வேண்டிய பல பயன்களை கொடுக்கும் ஒரு இயற்கை வளம். ஈழம் மற்றும் இந்தியாவில் காணப்படும் பனை மர இனத்தை Borassus flabellifer L. என்றும்,ஆப்பிரிக்காவில் காணப்படும் பனை இனத்தை Borassus aenthipoum Mart. என்றும் அழைப்பர்.........

          
உலக அளவில் அண்ணளவாக 140 மில்லியன் பனைமரங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

இந்தியா: 60 மில்லியன்
மேற்கு ஆப்பிரிக்கா - 50 மில்லியன்
ஈழம் - 11.1 மில்லியன்
இந்தோனெசியா - 10 மில்லியன்
மடகஸ்கார் - 10 மில்லியன்
மியன்மார் - 2.3 மில்லியன்
கம்பூச்சியா - 2 மில்லியன்
தாய்லாந்து - 2 மில்லியன்
                   
 இலங்கையை எடுத்து கொண்டால் 10.5 மில்லியன் பனை மரங்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய 4 மாவட்டங்களிலும் பரம்பி இருக்க மிகுதி 0.6 மில்லியன் மரங்கள் மட்டுமே ஏனைய இடங்களில் காணப்படுகிறது.

பனையின் பயன்கள்
1. பனை ஓலை


குருத்து ஓலையில் இருந்தே அதிகமான பயன் தரும் பொருட்கள் செய்யப்படுகின்றன. கைவினைப்பொருட்களான: பூக்கள், பூச்சாடிகள், போன்றவை நாளாந்த பாவனைப்பொருட்களான: பெட்டி, சுளகு, பாய், கடகம், திருகணை, நித்துபெட்டி, இடியப்ப தட்டு என பல பொருட்கள் செய்ய உதவுகிறது.
முற்றிய ஓலை மாட்டுக்கு உணவாக பயன்படுத்த படுவதுடன், வீடு வெய, வெலிகள் அடைக்க, தோட்ட நிலத்துக்கு, தென்னைக்கு பசளையாக பயன்படுத்தப்படுகிறது.

2. நார்
பனம் ஓலை/ இலை யில் இருக்கும் தண்டு/ மட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நார் நீண்ட நாள் பாவனைக்குரிய தூரிகைகள் (Brush),துடைப்பங்கள் செய்யவும், கயிறு திரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

3. மரம்/ தண்டு
கட்டுமான பணிகளுக்கு குறிப்பாக வீட்டு கூரைகளுக்கு சிலாகை, தீரந்தி, வளை, என்பவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

4. பூந்துணர் சாறு/ பதநீர் (Infloresence sap)
       மதுவத்தால் (Yeast) நொதித்தல் அடையாத பூந்துணர் சாறுபதநீராக அருந்தவும், பன்ஞ்சீனி, பனங்கட்டி, பனம் பாணி, பனங்கற்கண்டு செய்யவும் பயன்படுத்தபடுகிறது. பதநீரை கருப்பணி என பேச்சு வழக்கில்அழைப்பது வழக்கம். பதநீர் காலங்களில் பச்சரிசி, பயறு என்பனவும், பதநீரும்
கொண்டு கருப்பணி கஞ்சி தயாரிப்பதும் வழக்கம். பொதுவாக பத நீர் இறக்க சுண்ணாம்பிடுவார்கள். சுண்ணாம்பு மதுவங்களின் நொதித்தல் செயற்பாட்டை கட்டுப்படுத்தும். சுண்ணாம்பு பதநீரின் சுவையை மற்றிவிட கூடியது.யாழ்ப்பாணத்தில் செய்யப்பட்ட ஆய்வில் நாவல் பட்டையையும் நொதித்தல் செயற்பாட்டை கட்டுபடுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.
                                                 பதநீரில் வெல்லம் 12-13% ம், அமினோ அமிலங்கள், விட்டமின் பி,கனியுப்புக்கள் ஆகியவை நிறைய இருப்பதாக சொல்லப்படுகிறது. ஊரில் சின்னமுத்து, அம்மை நோய் வந்தவர்கள் உடன் கள்ளு குடித்தால் நோய் தாக்கம் குறையும் என்று சொல்லுவார்கள். மதுவத்தால் நொதித்தல் (Fermentation) அடைந்த பின் கள்ளு என அழைக்கப்படுவதுடன், இது சாரயாம் வடிக்கவும் பயன் படுகிறது.
5. நுங்கு


            முற்றாத பனங்காயை நுங்கு என அழைப்போம். நுங்கு மிகவும் சுவையான ஒரு பானம். ஆனால் அதனை நாம் தொழில் முயற்சியில் பயன்படுத்துவது இல்லை.
 2  மில்லியன் பனைமரங்களே இருக்கும்தாய்லாந்தில் இருந்து நுங்கு தகரத்தில் அடைக்கப்பட்டு உலகம் எங்கும் ஏற்றுமதியாக, அதிக பனைமர வளத்தை கொண்ட இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருந்து எந்த முயற்சியும் எடுக்கப்படாமை கொசுறு செய்தி.
6. பனம் பழம்
                       பனம் பழத்தில் இருந்து பெறப்படும் பழ கூழ் (Fruit pulp) பழபாகு (ஜாம்),பன்னாட்டு, குளிர் பானம் என்பன செய்ய பயன்படுத்தப்படுகிறது. அதை விட சுவையான சிற்றுண்டியான பனங்காய் பணியாரம் ஈழத்தில் பிரபலம். அதை வைத்து காதல்கடிதம் படத்தில் ஒரு பாடலும் வருக்றது. போர் காலத்தில் பனம் பழம் கொண்டு உடுப்பு தோய்த்தவர்கள் பலர். பனம் பழத்தின் வாசதில் மாடு உடைகளைசாப்பிட்டதாக கூட சொல்லுவார்கள். அதை விட பனம் பழம் தீயில் வாட்டி சாப்பிடுபவர்களும் உண்டு

7. பனம் கிழங்கு

                           பனங்கிழங்கை அவிக்காது எடுக்கப்படும் ஒடியலில் இருந்து ஒடியல் மா எடுப்பார்கள். ஒடியல் மாவில் இருந்து ஒடியல் பிட்டு, ஒடியல் கூழ்1
(ஒடியல் கூழ் 2)ஆகிய உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இவை ஈழத்தில் மிகவும் பிரபலமான உணவுகள். பனங்கிழங்கை அவித்து காய வைத்து வரும் புளுக்கொடியல், புளுக்கொடியல் மா சிற்றுண்டியாக பயன் படுத்தப்படுகிறது.பனம் பொருடகள் சம்பந்தமான ஆராய்ச்சிகள் மிக குறைவாகவே நடைபெறுகின்றன. அப்படி செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்து பல பயனுள்ள தகவல்கள் கிடைக்கப்பெற்றாலும் இன்னும் ஆராய்ச்சிகள் தேவையாக உள்ளது.பெரும்பாலான ஆய்வுகள் அதிகம் பயன்படுத்தப்படாத பழ கூழ் பற்றியே நடைபெற்றுள்ளன.ஒடியல் கூழ் (Fruit pulp)


1. கரோட்டினோயிட் (Carotenoids)எனும் மஞ்சள் நிறபொருளை கொண்டிருக்கிறது. பனம் பழத்தில் 2-253மில்லிகிராம் கரோட்டினொயிட் 100கிராம் பழத்தில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இது விற்றமின் எ யிற்கான ஒரு மூலமாகும்
2. பெக்ரின்
            இது உணவு உற்பத்தியில் உணவு பொருகளை உறுதியாக்க கூழ் நிலையில் பேண உதவும்.

3. Flabelliferin
          இதுவே  பனம் பழத்தில் காணப்படும் கசப்பு, காறல் சுவைக்கு காரணமான பதார்த்தமாகும். இதனை பழ கூழில் இருந்து பிரித்தெடுப்பதன் மூலம், பழ கூழை வேறு உணவு பொருட்கள், ஜாம் போன்றவற்றில் நிரப்பியாக பயன்படுத்த முடியும்.அத்துடன் இந்த Flabelliferin எனும் பதார்த்தம் நுண்ணங்கிகளை கொல்லும் இயல்பும் கொண்டது.
                                                              இலங்கையில் எலிகளில் செய்த ஆராய்சியில் Flabelliferin குருதியில் வெல்ல அளவை குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.இலங்கையில் நீரிழிவு நோயளிகளுக்கு 6 கிராம் பனாட்டை கொடுத்து சோதனை செய்த போது அவர்களின் குருதியில் இருக்கும் வெல்ல அளவில் குறைவு ஏற்பட்டதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பன்னாட்டில் இருக்கும் Flabelliferin ஆக இருக்க முடியும்.
இலங்கையில் பனை அபிவிருத்தி சபை பழகூழில் இருந்து பற்பசை செய்து மாதிரிகளை சந்தைக்கு விட்டிருந்தது.கேட்காமலே பயன் தரும் பனையை நாம் இன்னும் சிறப்பாக பயன் படுத்தி பொருளாதார பயன் பெற முடியும். ஆனால் அதற்கு நிறைய ஆய்வுகள் தேவை.

02 January 2012

வரலாற்றுச் சுவடுகள்
மேலே உள்ள படத்தை பாருங்க. இந்த படத்தில் இந்தியா எப்படியிருக்கு? இலங்கை என்ற வரைபடம் தெரியுதா?  கொஞ்சம் உத்துப் பாருங்க. ஆமாங்க.... நாம் நம்பித்தான் ஆகனும். இந்த லெமு காலத்திற்கு நீங்க போக வேண்டாம்.   7000 வருடங்களுக்கு முன்பு ஈழம் என்பது ஒரு தனித்தீவே அல்ல.  இப்ப நாம சொல்ற மன்னார் வளைகுடா அல்லது பாக் ஜலசந்தி போன்ற வார்த்தைகள் எல்லாமே காலப்போக்கில் இயற்கை உருவாக்கிய அற்புதம்.  

ஆங்கிலேயர்கள் தெளிவாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தங்களோட பெயரையே சூட்டிக்கிட்டாங்க.இராமேஸ்வரத்திலிருந்து இப்ப உள்ள இலங்கைக்கு நடந்தே போயிடலாம்ன்னு சொன்னா நம்புவீங்களா? 
நன்றி: