நகைச்சுவைப் பதிவுகள் பொதுவாக இடுவதில் விருப்பமில்லை.வித்தியாச-ரசனை கருதி சிரிப்பிற்கு சிறிது இடம் ஒதுக்குகிறேன். தொடர்ச்சியாக இந்த வரிசையில் சில பதிவுகள் வரலாம்.கூகிள் பிளஸ் அன்பர் M.S. Ramajanarthanan அவர்களுக்கு நன்றிகள்.
****************
நீ யாரோ ரெண்டு பேரோட ஊர் சுத்திட்டுஇருக்கியாமே ?'
'யாரோ உங்ககிட்டே ஒண்ணுக்கு ரெண்டா சொல்லியிருக்காங்க
*****************
அப்பா: உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது?
மகன்: நிலா மாதிரி!
அப்பா: நிலா மாதிரின்னா?
மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!!
மகன்: நிலா மாதிரி!
அப்பா: நிலா மாதிரின்னா?
மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!!
*********************
கணவன் : தெருவுல ஒரு கருப்பு நாய்
செத்து கிடக்கே.. நீ எதாவது அதுக்கு
சாப்பாடு போட்டியா..?
மனைவி : நான் உங்களுக்கு மட்டும் தாங்க
சாப்பாடு போட்டேன்.. வேற எந்த நாய்க்கும்
சாப்பாடு போடலை..
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
அந்த காலத்துல குதிரையில வந்து
கொள்ளை அடிப்பாங்களே.. அந்த
கொள்ளைக்காரங்க எல்லாம் இப்பவும்
இருக்காங்களா..?
இருக்காங்க.. ஆனா அங்கே அங்கே
ஸ்கூல்., காலேஜ்னு கட்டி செட்டில்
ஆயிட்டாங்க..
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
நான் சந்திரமண்டலத்தில 4 ஏக்கர்
நிலம் வாங்கலாம்னு இருக்கேன்..
சந்திரமண்டலத்திலயா..? அங்கே
கரெண்ட்., ரோடு வசதி எல்லாம்
கிடையாதே..?!!
டேய் லூசு.. இங்கே மட்டும்
அதெல்லாம் எங்கடா இருக்கு..?
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
" மன்னா..!! எதிரி நம் மகாராணியை
கடத்த திட்டமிட்டு உள்ளான்.. "
" அவனுக்கு வேண்டிய சகல
உதவிகளையும் உடனே
செய்யுங்கள் அமைச்சரே..!! "
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
( டீச்சர் மாணவனிடம்.. )
யார் என்ன சொன்னாலும்
அப்படியே நம்பிடக்கூடாது
ஏன்.?, எதுக்கு..?, எப்படி..?-னு
கேக்கணும்..
" ஏன் கேக்கணும் டீச்சர்..?
எதுக்கு கேக்கணும் டீச்சர்..?
எப்படி கேக்கணும் டீச்சர்..? "
-இன்னும் சிரிக்கலாம் அடுத்த பதிவில்.
No comments:
Post a Comment