04 December 2011

பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை


கனத்த கவிதை !


பார்ட்டிக்கு போனேன் அம்மா
நீ சொன்னதை மறக்கவே இல்லை
குடிக்க வேண்டாம் என்று சொன்னாய் என்று
சோடா மட்டும் குடித்துக் கொண்டேன்


நீ சொன்னதை போலவே அம்மா ,
பெருமையாய் இருந்தது எனக்கு.
குடித்து விட்டு ஓட்டவில்லை அம்மா
செய் ,என்று பிறர் தூண்டிய போதும்


சரியாகவே செய்தேன் தெரியும் அம்மா,
நீ சரியாகவே சொல்வாய்,அதுவும் தெரியும்
பார்ட்டி முடிந்து கொண்டிருக்கிறது அம்மா
எல்லாரும் கலைந்து கொண்டிருக்கிறார்கள்


காருக்குள் ஏறும் போது தெரியும் அம்மா,
பத்திரமாய் வந்து சேர்வேன் என்று
பொறுப்பும் அன்பும் சொல்லி
எனை நீ வளர்த்தது அப்படி அம்மாஓட்டத் துவங்கிவிட்டேன் அம்மா,
ஆனால் சாலைக்குள் வந்த போது
அடுத்த கார் என்னை கவனிக்காமல்
இடியாக மோதிக் கடந்தது


ரோட்டோரம் கிடந்த போது அம்மா
போலீஸார் பேசிக் கொண்டார் ,
"அடுத்த காரிலிருந்தவன் குடித்திருக்கிறான் "
ஆனால் விலை கொடுக்கப்போவது நான்தான்


நான் இறந்து கொண்டிருக்கிறேன் அம்மா
நீசீக்கிரம்வரமாட்டாயாஎன்றுஏங்கிக்கொண்டே..
இது எப்படி எனக்கு நடக்கலாம் அம்மா ?
வெறும்பலூனைப்போல்வெடித்ததுஎன்வாழ்க்கை


எனை சுற்றிலும் எங்கும் ரத்தம் அம்மா,
அதில் அதிகம் என்னுடையது தான் .
டாக்டர் சொன்னதை கேட்டேன் அம்மா
சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன்.


இதை மட்டும் உன்னிடம் சொல்ல வேண்டும்அம்மா,
நான் சத்தியமாக குடிக்கவில்லை .
அவர்கள் குடித்திருந்தார்கள் அம்மா
அவர்கள் எதையும் நினைக்கவில்லை


நான்போனபார்ட்டிக்கேகூடஅவனும்வந்திருக்கக் கூடும்
ஒரே ஓர் வித்தியாசம் தான்
அவன் குடித்தான்
நான் இறக்கப் போகிறேன் .


எதற்காக குடிக்கிறார்கள் அம்மா?
வாழ்க்கை வீணாக போகக் கூடுமே.
அம்மா, வலிகள் உணர்கிறேன் இந்நேரம் ,
கத்திப் போல் கூர்மையாக


என்னைமோதியவன்நடந்துகொண்டிருக்கிறான் அம்மா
இது கொஞ்சமும் நியாயமில்லை
இங்கே நான் இறந்து கொண்டிருக்கிறேன்
வெறித்துப்பார்க்கிறான் அவன், வேறு என்னசெய்ய முடியும்


தம்பியை அழ வேண்டாம்என்றுசொல்லுங்கள் அம்மா,
அப்பாவை தைரியமாக இருக்கசொல்லுங்கள் .
நான் சொர்க்கம் சேர்ந்த பின்னால்
"நல்ல பையன்" என்று என்கல்லறையில் எழுதி வையுங்கள்.


எவரேனும்அவனுக்குசொல்லியிருக்கவேண்டும் அம்மா
குடித்து விட்டு ஓட்ட வேண்டாம் என்று
எவரேனும் சொல்லிமட்டுமிருந்தால் அம்மா
நான் இன்னமும் உன் மகனாயிருந்திருப்பேன்


என் மூச்சடைக்கிறது அம்மா
ரொம்ப பயமாய் இருக்கிறது
எனக்காக அழாதே அம்மா..
எனக்காக எப்போதும் நீ இருந்தாய் ...

ஒரே ஒரு கேள்வி தான் அம்மா
நான் விடை பெற்றுக் கொள்ளும் முன்னால்
குடித்துவிட்டு ஒட்டியது நானில்லை
இறப்பது மட்டும் ஏன் நானாகவேண்டும் ?

தமிழில் : பூங்குழலி
நன்றி-http://www.eegarai.net/

23 November 2011

சுஜாதாவின் டில்லி பயணம்

ஒவ்வொரு வருஷமும் டில்லி மாறுகிறது.அதிகாலை புகைப்படலம் அதிகமாகி இருக்கிறது.கட்டிடங்கள் உயர்ந்திருக்கின்றன.முன்பெல்லாம் குளிரில் பிளாட்பாரத்தில் சேலத்து சிறுமிகள் தூங்குவார்கள்.இப்போது அவர்கள் தங்கைகளும் உடன் தூங்குகிறார்கள்.
                                                                                  
           நீ பிரபலமாயிருக்கிறாய்.அதனால் உன்னால் இலக்கியம் படைக்க முடியாது.-சுஜாதா அடிக்கடி எதிர்கொள்ளும் சித்தாந்தம்.
        
குளிர் எலும்பைத் தொடுகிறது. ஆரம்பத்தில் குறிப்பிட்ட புகைப்படலம் நகரத்தைக் கவ்வுகிறது.அந்தச் சேலத்துச் சிறுமி சாக்குப் பையைத் தன்மேல் சுற்றிக் கொண்டு தன் தங்கச்சியையும் அணைத்துக் கொண்டு மரத்தடியில் தூங்குவதற்கு ஆயத்தம் செய்கிறாள்.இலக்கியம் என்பதே ஒரு தேவையில்லாத சமாச்சாரமாகப்படுகிறது அப்போது.எல்லாக்கதைகளையும்,கவிதைகளையும் எரித்து அவளைச் சூடு பண்ண வேண்டும் போலிருக்கிறது.


-"கணையாழி"யில் சுஜாதா எழுதிய கட்டுரை சுருக்கமாக இங்கே. 
*-தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. 

29 October 2011

தமிழில் எண் குறிகள்தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.
0123456789101001000

எண் ஒலிப்பு

 • ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் சொற்களும் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
எண்அளவுசொல்
1/320320 ல் ஒரு பங்குமுந்திரி
1/160160 ல் ஒரு பங்குஅரைக்காணி
3/320320 ல் மூன்று பங்கு அரைக்காணி முந்திரி
1/8080 ல் ஒரு பங்குகாணி
1/6464 ல் ஒரு பங்குகால் வீசம்
1/4040 ல் ஒரு பங்குஅரைமா
1/3232 ல் ஒரு பங்குஅரை வீசம்
3/8080 ல் மூன்று பங்குமுக்காணி
3/6464 ல் மூன்று பங்குமுக்கால் வீசம்
1/2020 ஒரு பங்கு ஒருமா
1/1616 ல் ஒரு பங்குமாகாணி (வீசம்)
1/1010 ல் ஒரு பங்குஇருமா
1/88 ல் ஒரு பங்குஅரைக்கால்
3/20 20 ல் மூன்று பங்குமூன்றுமா
3/1616 ல் மூன்று பங்குமூன்று வீசம்
1/5ஐந்தில் ஒரு பங்குநாலுமா
1/4நான்கில் ஒரு பங்கு கால்
1/2இரண்டில் ஒரு பங்குஅரை
3/4நான்கில் மூன்று பங்குமுக்கால்
1ஒன்றுஒன்று
 • எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை இருக்கும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
எண்ஒலிப்புச் சொல்
1ஒன்று (ஏகம்)
10பத்து
100நூறு
1000ஆயிரம்(சகசிரம்)
10,000 பதினாயிரம்(ஆயுதம்)
1,00,000நூறாயிரம்(லட்சம் - நியுதம்)
10,00,000பத்து நூறாயிரம்
1,00,00,000கோடி
10,00,00,000அற்புதம்
1,00,00,00,000நிகற்புதம்
10,00,00,00,000கும்பம்
1,00,00,00,00,000கணம்
10,00,00,00,00,000கற்பம்
1,00,00,00,00,00,000 நிகற்பம்
10,00,00,00,00,00,000பதுமம்
1,00,00,00,00,00,00,000சங்கம்
10,00,00,00,00,00,00,000வெள்ளம்(சமுத்திரம்)
1,00,00,00,00,00,00,00,000 அந்நியம்
10,00,00,00,00,00,00,00,000(அர்த்தம்)
1,00,00,00,00,00,00,00,00,000பரார்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,000பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)


இன்னும் படிக்க         

28 October 2011

தமிழ்ப் பழமொழிகள்

தமிழ்ப் பழமொழிகள்  முழுமையானத் தொகுப்பு! pdf வடிவில்

pdf-ஐ scribd-ல் படிக்க 

16 October 2011

தேர்தல் எதிரொலி!


தேர்தல் எதிரொலி!            

     இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் ரிசல்ட் தெரிஞ்சுரும்.    சில   பேர்  உள்ளாட்சி'ல  தோத்துட்டா என்ன?   எங்க  வீட்டு  ஆச்சியிடம்   கண்டிப்பாக ஜெயிப்பேன்...  என்று சில பேர் மார்தட்டி எஸ்கேப் ஆகுவது உண்டு.        ஆனால் சில வேட்பாளர்கள் வெளியே    சொல்லாமல்     உள்ளுக்குள்ளேயே அழுவதுண்டு.   அப்படி   தேர்தலில்    தோற்றவர்கள் சொல்லும்   காமெடி    கமெண்ட்...
                                      
                                         இப்படி காதுல பூவ வச்சிட்டாங்களே!!
                                                
நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு! பிறகு எப்படி இப்படி ஆச்சு...         ஒன்னும் புரியலியே!                                         
               வரும் வரும்னு சொல்லிட்டு கடைசி வரைக்கும் வரலியே...!
                               
               இத முதல்லயே செஞ்சுருக்கலாமோ!!
                      
      நல்ல வேளை..ரப்பராவது மிச்சமாச்சு!! ம்ம்ம்ம்ம்....
               
என்னது எனக்கு கிடைச்சது முட்டை ஓடா? அது ஓடு இல்லீங்க..வோட்டுங்க!!

ஜெயித்தவர்கள் சில பேர் சொல்லும் கமெண்ட்:
ஆத்தாடி!! எம்புட்டு ஓட்டு...
அப்பாடா!! ஒரு வழியா ஒரு ஓட்டு வித்தியாசத்துல ஜெயிச்சுட்டேன்...


இப்படியே பார்த்துட்டு போனா எப்புடி? நீங்களாவது ஒரு வோட்டு போடுங்க...அட கமெண்ட்டாவது சொல்லுங்க!!!                                                    


நன்றி:http://alaiyallasunami.blogspot.com                                             

13 October 2011

காற்றும்-கடலும்!

இவை அனைத்தும் காற்றைக் குறிக்கும் சொற்கள்:

 1. வாதம்
 2. கால்
 3. வளி
 4. மருந்து
 5. வாடை
 6. பவனம்
 7. வாயு
 8. கூதிர்
 9. மாருதம்
 10. மால்
 11. கோதை
 12. கொண்டல்
 13. உலவை
 14. கோடை
 15. ஊதை
 16. வங்கூழ்
 17. ஒலி
 18. சதாகதி
 19. உயிர்ப்பு
 20. அரி
 21. கந்தவாகன்
 22. பிரபஞ்சனன்
 23. சலனன்
கடலின் வேறு பெயர்கள் :

 1. ஆழி
 2. ஆர்களி
 3. வேலை
 4.  புணரி
 5. வாரதி
 6. சமுத்திரம்
 7. பௌவம்
 8. அத்தி
 9. அலக்கர்
 10. பெருநீர்
 11. அம்பரம்
 12. உப்பு
 13. வீரை
 14. தோயம்
 15. தொன்னீர்
 16. முந்நீர்
 17. தென்திரை
 18. ஓதம்
 19. வெள்ளம்
 20. நேமி
 21.  சலதி
 22. வாரி
 23. அலை
 24.  பரவை
 25.  வாரம்
 26. கார்கோள்
 27. உவரி
-இன்னும்..இன்னும்.. தெரிந்தால் சொல்லுங்களேன்.

நன்றி:

ஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்!

ரமேஷ் பாலசுப்ரமணியம் என்ற நண்பர் பகிர்ந்த கட்டுரை.உங்களுக்கும் பயன் தருமென நம்புகிறேன்.


 நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே.. சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.

இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது. இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன. இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும். உணவின் மூலமும், நீரின் மூலமும் நோய் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ள சித்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதில் வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும்.

அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர், நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர், போன்றவை அடங்கும்.

ஆவாரம்பூ குடிநீர்


“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..”

என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.

இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

துளசி குடிநீர்

துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.

டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வல்லாரை குடிநீர்

எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.

இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.

காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.

இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

கரிசாலை குடிநீர்


“ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி”

என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.

வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.

கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.

இரத்தக் கொதிப்பு, காசநோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

சீரகக் குடிநீர்

சீர்+அகம் =சீரகம். அகம் என்னும் உடலை சீர்படுத்துவதே சீரகத்தின் சிறப்பான குணமாகும்.

சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது.

இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும்.

ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும்.

கண் சூடு குறைக்கும். வாய்ப்புண் வயிற்றுப்புண்ணைப் போக்கும்.

சரும நோய்கள் வராமல் தடுக்கும். இதயத்திற்கு இதமான குடிநீர்தான் சீரகக் குடிநீர்.

மாம்பட்டைக் குடிநீர்

மாம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தினால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு தணியும், சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். பித்தத்தைக் குறைக்கும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

நெல்லிப்பட்டைக் குடிநீர்

நெல்லி மரப் பட்டையை காயவைத்து இடித்து பொடியாக்கி குடிநீரில் இட்டு காய்ச்சி அருந்துவது நல்லது.

இது ஆஸ்துமா, சளி, இருமல், வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, நுரையீரல் சளி, இரத்தச் சளி போன்றவற்றைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும். குடல்புண்களை ஆற்றும். மூலநோய்க் காரர்களுக்கு மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

ஆடாதோடைக் குடிநீர்


ஆடாதோடை இலைகளை சிறிதாக நறுக்கி தேன் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடீநீராக அருந்தி வந்தால்,

சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.

வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.

சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.

01 October 2011

இரண்டாம் உலகப் போரின் போர் விமானங்கள்

மதிப்பிற்குரிய அண்ணன் மருதன் அவர்கள் எழுதிய 'இரண்டாம் உலகப் போர்' புத்தகத்தைப் படித்து பலநாட்களாயிற்று. திடீரென சில உரையாடல்களுக்குப் பின் நண்பர் அர்ஜுன் மூலமாக அப்புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த, அதாவது இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட போர் விமானங்கள் கிடைத்தன. மேலும்,அதுபற்றிய (போர்) குறிப்புகளும் கிடைத்தன.அதை பிறிதொரு சமயம் வெளியிடுகிறேன்.    
Fighter planes used in second world war:

RAF's HURRICANE:SPITFIRES:


HALIFAX:


LANCASTER:


WELLINGTON BOMBERS:


LUFTWAFFE:


THE FOCKE-WULF FW190:


MESSERSCHMITT Bf-109:


HEINKEL He-111:


MIG-3:


Lyushin Il-2:


YAK-3:P-38 LIGHTENING:


P-47 THUNDERBOLT:


P-51 MUSTANG:


B-17 FLYING FORTRESS:


B-24 LIBERATOR:

27 September 2011

வறுமைக் கோடு நிர்ணயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் - ஓர் ஒப்பீடு!

அண்மையின் மத்திய திட்டக் குழு ஒரு விநோத தகவலை தெரிவித்திருக்கிறது. அதாவது, தினசரி ரூ.32-க்கும் அதிகமாக செலவு செய்யும் இந்தியர் ஒருவரை ஏழையாக கருத இயலாது கருத முடியாது என்று சொல்லி இருக்கிறது.

இந்தியாவில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களில் மாதம் ஒன்றுக்கு முறையே ரூ.965 மற்றும் ரூ.781-க்கும் அதிகமாக செலவு செய்பவர்களை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக கருத இயலாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய திட்டக் குழு தெரிவித்துள்ளது.இதன்படி, தினசரி நகரங்களில் ரூ.32-க்கும், கிராமங்களில் ரூ.26-க்கும் அதிகமாக செலவிடுபவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்காக வழங்கப்படும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சலுகைகளை பெற முடியாது.

அதே நேரத்தில், சென்னை, புதுடெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய பெரு நகரங்களில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் மாதச் செலவு ரூ.3,860-ஐத் தாண்டினால் அந்தக் குடும்பத்தை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் சேர்க்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதற்கு தானியங்களுக்காக நாள் ஒன்றுக்கு ரூ.5.50, பருப்பு வகைகள், பால் மற்றும் சமையல் எண்ணெய்க்காக நாள் ஒன்றுக்கு முறையே ரூ.1.02, ரூ.2.33 மற்றும் ரூ.1.55 செலவிட்டால் போதுமானது என்று திட்டக்குழு தெரிவித்துள்ளது.

இதில் ஆச்சரியம் என்ன என்றால், நகரங்களில் வசிப்பவர்கள் வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்துக்காக மாதம் ஒன்றுக்கு ரூ.49.10-க்கும் அதிகமாக செலவு செய்தால், அவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள்.

மாதம் ஒன்றுக்கு மருத்துவச் செலவு மற்றும் கல்விக்காக முறையே ரூ.39.70 மற்றும் ரூ.29.60 செலவிடுபவர்களை ஏழையாக கருத முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த மதிப்பீடு தற்காலிகமானதுதான் என்றும் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் தெண்டுல்கர் குழு அறிக்கைபடி இது நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் திட்டக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மதிப்பீடு சரிதானா என்றால் ஆரம்ப பள்ளிக் கூடத்தில் படிக்கும் பிள்ளைக் கூட இல்லை என்று சொல்லிவிடும். காரணம், நகரங்களில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவருக்கான ஒரு நாள் செலவு 32 ரூபாயை விட அதிகமாக இருக்கிறது. அந்தக் குழந்தைக்கு ஒரு நாளில் மூன்று வேளை பால் மற்றும் பிஸ்கட், மூன்று வேளை சாப்பாடு, பள்ளிக் கூடத்துக்கு சென்று வரும் போக்குவரத்து செலவு போன்றவற்றை கணக்கில் எடுத்தால் சர்வ சாதாரணமாக 50 ரூபாயை தாண்டிவிடும்.

அடுத்து, வளர்ந்த ஒரு இந்தியரை எடுத்துக் கொண்டால் அவர் நகரங்களில் மதிய வேளையில் ஓரளவுக்கு நல்ல திருப்திகரமான சாப்பாடு சாப்பிட வேண்டும் என்றாலே சுமார் 35 ரூபாய் தேவைப்படும். இந்த ஒரு வேளை உணவுக்கே திட்டக் கமிஷன் குறிப்பிடும் தொகை செலவாகி விட்டால் மற்ற வேளைகளில் பட்டினியா கிடப்பது?

இந்த அறிக்கையில் கொடுமையான விஷயம் என்னவென்றால் நகர்புறங்களில் வசிப்பவர்களின் வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்து செலவு மாதம் ஒன்றுக்கு 49.10 ரூபாயை தாண்டினால் அவர்கள் பணக்காரர்களாம். சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களில் முக்கியமான பகுதிகளில் ஒரு மாதத்துக்கு ஒரு ச.அடியின் வாடகையை 50 ரூபாய்க்கு அதிகமாக இருக்கிறது. போக்குவரத்து செலவை பற்றி கேட்கவே வேண்டாம். கூப்பீடு தூரத்துக்கு போக வேண்டும் என்றாலே ஆட்டோவுக்கு குறைந்தது 20 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது.

அடுத்த மிகப் பெரிய கேலிக் கூத்து..! 

மருத்துவச் செலவு மற்றும் கல்விக்காக மாதம் 39.70 ரூபாய் செலவு செய்யும் நகர் புற இந்தியர்கள் பணக்காரர்களாம். நகரங்களில் மணிக் கணக்கில் காத்திருந்து டாக்டர்களின் ஆலோசனை பெற ஒரு முறைக்கு குறைந்தது 100 ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதில், அவர் மருந்து - மாத்திரைகள் எழுதிக் கொடுத்தால் குறைந்தது, ஐநூறு ரூபாய் காலி.

இந்தியாவில் வறுமை கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து காட்டவே செயற்கையான முறையில் இயல்பு வாழ்க்கைக்கு மாற்றமாக திட்டக் குழு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் தனிநபர் வருமானம் போன்றவற்றால், உலகின் பணக்கார நாடு என்ற பெருமைக்குரிய அமெரிக்கா தற்போது அந்நிலையை படிப்படியாக இழந்து வருகிறது.

இன்றைய நிலையில் உலகில் மோசமாக நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் நாடு அமெரிக்கா.
அங்கு அமெரிக்காவில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 22,314 டாலருக்கு (சுமார் ரூ.10.50 லட்சம்) குறைவாக இருந்தால் அந்த குடும்பம் வறுமையில் வாடுவதாக எடுத்துக்கொள்ளப்படும். அதேபோல், தனிநபராக இருந்தால் அவரது ஆண்டு வருமானம் 11,139 டாலருக்கு (சுமார் ரூ.5.25 லட்சம்) குறைவானால் அவரும் வறுமையில் வாழ்பவராக கருதப்படுகிறார்கள்.

அமெரிக்காவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பத்தின் ஆண்டு வருமானத்தோடு ஒப்பிடும் போது இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பத்தின் ஆண்டு வருமானம், கிட்டத்தட்ட 272 மடங்கு குறைவு. இந்தியாவை விட அமெரிக்காவில் செலவுகள் நிச்சயமாக 272 மடங்கு அதிகம் என்று சொல்ல முடியாது.

அமெரிக்காவின் வசிக்கும் நம் தமிழ் நண்பர்களிடம் பேசிய போது ஒரு விஷயம் பிடிபட்டது. நம் ஊரில் ஒரு குடும்பத்தின் மாத வருமானம் சுமார் 10,000 ரூபாய் இருந்தால் ஓரளவுக்கு சமாளிக்க முடியும். அமெரிக்காவில் மாத வருமானம் சுமார் 1,150 டாலர் இருந்தால் ஒரு குடும்பம் சமாளிக்க முடியும். அந்த வகையில் அந்த நாட்டின் வறுமைக் கோட்டு கணக்கெடுப்பு சரியாகத்தான் இருக்கிறது என்று சொல்லாம். அதையொட்டி பார்க்கையில், நம் நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் என்பதற்கான வருமான அளவை மாத வருமானம் 10,000 ரூபாய் என்று நிர்ணயிப்பது நியாயமாக இருக்கும்.

அரசு செய்யுமா?

 கட்டுரையாளர்: சி.சரவணன்

 நன்றி: vikatan.com

24 September 2011

தொ(ல்)லைகாட்சிகள் !

வணக்கம்.
                  இன்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் பற்றியே இப்பதிவு.   Hello Guys, என்றபடி தொடங்கிய அந்த FORWARD MESSAGE பலருக்கும் போயிருக்கிறது.இன்னும் பயணிக்கும்.இதோ அந்த செய்தி. 


 *கலைஞர் தொலைகாட்சி*, ராஜ் டிவி, மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில்****
இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.

பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து
காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில்
காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?' என்பதுதான் அது.
...
இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து
நடித்த நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார்.

உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (!) கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியும் செந்திலும்' என
பதில் சொல்கிறார்.ரஜினியையும், கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும்
போலவா இருக்கிறார்கள்? என்ன கூத்து இது?

தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு
முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள்
இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே
கொடுக்கிறார்களா? அவர்களின்நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும்உண்மைகள் கிடைத்தன.

இந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக்
கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே
அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து
பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.

திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அதுஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை
வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு
அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில்
உலகெல்லாம் உள்ள மக்கள், குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:

1.இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள்.
பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன்
நம்பர், ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை
சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.

2. ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் )
நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில்
சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை
அறியலாம்.

3.கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது
பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும்
பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.

4.நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட
நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.


5.இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம்
 இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள்.
 இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு
நிறுவனங்களும் உடந்தை.

இதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள்.
உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த
வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள். 

                                                                                                            -    அன்பன் தமிழ் 

23 September 2011

கடலைக் காப்போம்!

மனிதன் உயிர்வாழ மிகவும் தேவை ஆக்ஸிஜன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மனிதனுக்கு மட்டுமல்லாமல் இந்த பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தேவையான ஆக்ஸிஜனை தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் மூலமாகத் தருகின்றன என்பது நாம் அறிந்ததே. 

அதேநேரத்தில், நிலத்தில் உள்ள தாவரங்கள் நமக்கு தேவையான ஆக்ஸிஜனின் அளவில் 10 சதவிகிதத்தை மட்டுமே பூர்த்தி செய்கின்றன. அப்படியென்றால், மீதமுள்ள 90 சதவிகித ஆக்ஸிஜனை அளிப்பது எது என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கிறார், கொல்கத்தாவில் உள்ள கடல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி செல்வின் பிச்சைக்கனி.

கடலின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் பைட்டோபிளாங்டன் (phytoplankton) என்ற கண்ணுக்குத் தெரியாத தாவரங்கள்தான். இவை போல கடலில் உள்ள மற்ற கடற்பாசி மற்றும் கடற்புற்கள் போன்ற பசும் தாவரங்களும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன. ஆனாலும் நமக்கு தேவையான ஆக்ஸிஜனை அளிப்பதில் மிதவை தாவரங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். 

கடலில் உள்ள சிறிய வகை மீனிலிருந்து பெரிய திமிங்கலம் வரை அனைத்து உயிர்களுக்கும் தேவையான உணவினை அளிப்பதும் இந்த மிதவை தாவரங்கள்தான். இந்தத் தாவரங்களின் சிறப்பு என்வென்றால், இவற்றை நாம் நுண்ணோக்கியின் மூலமாக மட்டுமே காண இயலும். இவை கடலின் மேற்பரப்பிலிருந்து சூரிய ஒளி செல்லக்கூடிய ஆழம் வரை காணப்படுகின்றன. இவை ஒரு செல் உயிரி தாவரங்களாகும். 

இந்த மிதவை தாவரங்கள் நிலத்தில் உள்ள தாவரங்களைப் போன்று, ஒளிச்சேர்க்கையின்போது கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை எடுத்துக் கொள்வதால் (பயன்படுத்துவதால்) வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்லா வாயுவான கார்பன் டை ஆக்ஸைடின் அளவைக் குறைத்து கார்பனை நிலைப்படுத்துகின்றன. அதன் மூலமாக புவி வெப்பமாவது தடுக்கப்படுகிறது.

இந்தத் தாவரங்கள் அளவில் மிகச் சிறியவை. அதனால், வெறும் கண்ணால் பார்க்க முடியாது. ஒரு லிட்டர் கடல் நீரில் சுமார் ஐம்பதாயிரம் செல்கள் இருக்கும் என்றால், இவற்றின் அளவை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்களேன். இந்த எண்ணிக்கை இடத்துக்கு இடம் கடலின் நீர், தரம் மற்றும் தாதுக்களின் அளவைப் பொறுத்து வேறுபடும். ஒரு சில பைட்டோபிளாங்டன்கள் வெளியிடும் வேதிப்பொருளானது காற்றில் கலந்து வானில் கந்தகத் தன்மையை ஏற்படுத்தி மேகங்கள் உருவாவதற்கு வழிசெய்து மழைப் பொழிவுக்கு காரணமாக அமைகின்றன. 

பருவ நிலை மாற்றத்தால் பூமியின் வெப்பநிலை அதிகரித்து, அதனால் கடல் நீரின் வெப்பநிலையும் அதிகரிக்கின்றது. அதிக வெப்பநிலையில் இத்தாவரங்களின் உற்பத்தியும் அதிகரிக்கும். ஆனால், குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் படிப்படியாக தாவரங்களின் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.புவி வெப்பமடைவதால் நீர் அமிலத்தன்மை அடையும். இது சில வகை தாவரங்களை மிகவும் பாதிக்கும். கடலின் நீரோட்டங்கள் (water current) திசை மாறுவதால், கடலின் கீழிருந்து கடலின் மேற்பரப்புக்கு வரக்கூடிய தாதுக்களின் அளவும் குறையும். அதனால், தாவரங்களின் வளர்ச்சி வீதம் குறைய வாய்ப்புள்ளது. 

கடலில் கழிவுநீர் கலப்பதினால் கடல்நீர் மாசுப்பட்டு இந்தத் தாவரங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. நம்மால் முடிந்த அளவு கடல் மாசுபடாமல் பார்த்துக் கொண்டாலே போதும். நமக்கு பல வழிகளில் உயிர்காக்கும் தோழனாய் திகழ்ந்து நம்மை வாழ வைக்கும் தாவரங்களை பாதுகாக்க முடியும்," என்கிறார் செல்வின் பிச்சைக்கனி. 

நமது பங்குதான் என்ன? 

பருவநிலை மாற்றத்தையும் புவி வெப்பமடைவதையும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கடல் மாசுபடுவதில் இருந்து தடுப்பதற்கு தனி மனிதர்களாகிய நாமும் பங்காற்ற முடியும். அவற்றில் சில வழிகள்:

* பழைய டீசல் வாகனங்களையும், பெரிய இயந்திரங்களையும் உபயோகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

* மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மின் உபகரணங்களை பயன்படுத்தும்போது மட்டுமே சுவிட்சினை ஆன் செய்ய வேண்டும், மற்ற நேரங்களில் ஆஃப் செய்ய வேண்டும்.

* மின்சார நிலையங்களில் இருந்து அதிக அளவு நச்சு வாயு-க்கள் (கார்பன்) வெளியேறுகின்றன. அதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

* குறைந்த தூரங்களுக்கு செல்ல மிதி வண்டியை பயன்படுத்தலாம் அல்லது நடந்து செல்லலாம். இதன் மூலம் வாகனங்களில் இருந்து வெளியேறக்கூடிய கார்பன் அளவினை குறைக்க முடியும். நடந்து செல்வது உடலுக்கும் ஆரோக்கியம் என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல.

* வீடு மற்றும் தெருவோரங்களில் சிறு செடிகளையும், மரங்களையும் வளர்க்க வேண்டும்.

* பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகள் அதிக அளவில் கரியமில (கார்பன் டை ஆக்ஸைடு) வாயுவை வெளியிடுகின்றன.

* கழிவு நீர்களை சுத்திகரிப்பு செய்த பின்னர்தான் ஆறுகளிலோ அல்லது கடலிலோ விட வேண்டும்.
இவ்வாறு நம்மாலானவற்றைச் செய்தால்தான் கடலில் உள்ள உயிர்களை பாதுகாக்க முடியும்.
நம்முடைய அடுத்த தலைமுறைக்கு சொத்து, பணம் சேர்த்து வைப்பதைவிட நல்ல ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் தூய காற்றையும் வைத்துவிட்டு செல்வது நமது கடமை.

இந்தப் பூமியில் நாம் வாழ்வது குறைந்த காலம்; நாம் வசிக்கும் இந்தப் பூமி, நம்முடைய சந்ததியினரும் குடியேறப்போகும் ஒரு வாடகை வீடு என்பதை மறந்துவிடாது பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழல் மீது அக்கறை கொள்ளாமல் இருந்தால், குடிநீரைப் போல நாம் சுவாசிக்க நல்ல காற்றினைக் கூட வரும் காலங்களில் விலை கொடுத்துதான் வாங்க வேண்டி வரும் என்ற எச்சரிக்கைமணியின் ஓசையும் உள்வாங்கிக்கொள்ளுங்கள்!

கட்டுரையாளர்:தோ.திருத்துவராஜ்
நன்றி:vikatan.com 


 

21 September 2011

தமிழ்ப் பழமொழிகள் -5


இப்பதிவில் 'ஊ ' -ல் மட்டும்.பொறுமையாகப் படியுங்கள்.ஏதேனும் ஒரு கணம் உங்களுக்கு உதவலாம்.பிழைகளோ,சேர்ப்புகளோ ,கருத்துகளோ இருப்பின் பதிவு செய்யுங்கள்.

இதற்கு முன்    இ,ஈ  உ 

 1. ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும்
 2. ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
 3. ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
 4. ஊண் அற்றபோது உடலற்றது.
 5. ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
 6. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
 7. ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
 8. ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
 9. ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
 10. ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா?

15 September 2011

தமிழ்ப் பழமொழிகள் உ - பகுதி-04

இப்பதிவில் 'உ' -ல் மட்டும்.பொறுமையாகப் படியுங்கள்.ஏதேனும் ஒரு கணம் உங்களுக்கு உதவலாம்.பிழைகளோ,சேர்ப்புகளோ ,கருத்துகளோ இருப்பின் பதிவு செய்யுங்கள்.

இதற்கு முன்    இ,ஈ 

 1. உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
 2. உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
 3. உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
 4. உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
 5. உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
 6. உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.
 7. உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
 8. உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
 9. உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
 10. உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
 11. உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
 12. உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை
 13. உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
 14. உப்​பைத் தின்​ற​வன் தண்​ணீர் குடிப்பான்
 15. உரம் ஏற்றி உழவு செய்
 16. உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
 17. உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
 18. உலோபிக்கு இரட்டை செலவு.
 19. உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
 20. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
 21. உளவு இல்லாமல் களவு இல்லை.
 22. உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
 23. உள்ளது போகாது இல்லது வாராது.
 24. உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
 25. உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
 26. உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.
 27.  [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]14 September 2011

தமிழ்ப் பழமொழிகள் இ, ஈ- பகுதி-03

தமிழ்ப் பழமொழிகள் குறித்த தேடலில் இருந்தேன்.அதுசமயம் பரவலாக பல்வேறு பழமொழிகள் காணக்கிடைத்தன.நிரம்பக் கிடைத்துள்ளது.எனவே இப்பதிவில் 'இ','ஈ' -ல் மட்டும்.பொறுமையாகப் படியுங்கள்.ஏதேனும் ஒரு கணம் உங்களுக்கு உதவலாம்.பிழைகளோ,சேர்ப்புகளோ ,கருத்துகளோ இருப்பின் பதிவு செய்யுங்கள்.

இதற்கு முன்   


இ, ஈ

 1. இக்கரைக்கு அக்கரை பச்சை.
 2. இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
 3. இஞ்சி இலாபம் மஞ்சளில்.
 4. இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
 5. இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
 6. இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
 7. இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
 8. இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
 9. இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
 10. இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.
 11. இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
 12. இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
 13. இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
 14. இராச திசையில் கெட்டவணுமில்லை
 15. இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
 16. இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
 17. இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
 18. இருவர் நட்பு ஒருவர் பொறை.
 19. இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
 20. இல்லது வாராது; உள்ளது போகாது.
 21. இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
 22. இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
 23. இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
 24. இளங்கன்று பயமறியாது
 25. இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
 26. இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
 27. இளைய பிள்ளைக்காரிக்குத் தலைப் பிள்ளைக்காரி வைத்தியம் சொன்னது போல.
 28. இறங்கு பொழுதில் மருந்து குடி.
 29. இறுகினால் களி , இளகினால் கூழ்.
 30. இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
 31. இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
 32. இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
 33. இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?
 34. ஈக்கு விடம்* தலையில், தேளுக்கு விடம்* கொடுக்கில்.
 35. ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
 36. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
 37. ஈர நாவிற்கு எலும்பில்லை.
 38. ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.

*-விடம் =விஷம் .

12 September 2011

தமிழ்ப் பழமொழிகள்-ஆ பகுதி-02

தமிழ்ப் பழமொழிகள் குறித்த தேடலில் இருந்தேன்.அதுசமயம் பரவலாக பல்வேறு பழமொழிகள் காணக்கிடைத்தன.நிரம்பக் கிடைத்துள்ளது.எனவே இப்பதிவில் 'ஆ'-வில் மட்டும்.பொறுமையாகப் படியுங்கள்.ஏதேனும் ஒரு கணம் உங்களுக்கு உதவலாம்.பிழைகளோ,சேர்ப்புகளோ ,கருத்துகளோ இருப்பின் பதிவு செய்யுங்கள்.

 இதற்கு முன்   அ 
 1. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
 2. ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
 3. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
 4. ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
 5. ஆசை வெட்கம் அறியாது.
 6. ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.
 7. ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
 8. ஆடிப் பட்டம் தேடி விதை.
 9. ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
 10. ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
 11. ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமா.
 12. ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
 13. ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
 14. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
 15. ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
 16. ஆயிரங்காலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
 17. ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
 18. ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே
 19. ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்துச் சீனி வாங்க முடியலையாம்!
 20. ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
 21. ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
 22. ஆரால் கேடு, வாயால் கேடு.
 23. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
 24. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
 25. ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
 26. ஆழமறியாமல் காலை இடாதே.
 27. ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
 28. ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
 29. ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
 30. ஆழம் தெரியாமல் காலை விடாதே.
 31. ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
 32. ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
 33. ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
 34. ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
 35. ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
 36. ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
 37. ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
 38. ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
 39. ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
 40. ஆனைக்கும் அடிசறுக்கும்.
 41. ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
 42. ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.