24 July 2011

சீனாவின் இன்னொரு முகம்

சிறந்த கட்டுரைக்காக நீண்ட யோசிப்பிலும்,வாசிப்பிலும் இருந்தேன்.நண்பர் ஏசி-ன் கட்டுரை மொழிபெயர்ப்பில் இருந்தேன்.அது சமயம்,அண்ணன் மருதன் அவர்களின் கட்டுரைகளை படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன்.அவரின் சிறுசிறு கருத்துகளை ட்வீட்டிய நான் இக்கட்டுரையை மீள்பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணினேன்.அவரின் முழு அனுமதி பெற்றே இதை நான் வெளியிடுகிறேன்.   
                                                 சீனாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்."சீனா-விலகும் திரை "-யை நீங்கள் படிக்கவில்லையெனில் இக்கட்டுரை உங்களுக்கு பயன் தரும் என்றே நம்புகிறேன்.இன்னும் தீவிர புத்தக வாசிப்பிலிருந்து உங்களுக்கு கருத்துகளை திரட்டி வருகிறேன். இனி 

                                          சீனாவின் இன்னொரு முகம்

Chen Guidi, Wu Chuntao இருவரும் இணைந்து எழுதியிருக்கும் Survey of Chinese Peasants என்னும் புத்தகம் குறித்த விமரிசனம் நியூ லெஃப்ட் ரிவ்யூவில் வெளிவந்துள்ளது. பழைய கட்டுரை. எனக்கு இப்போதுதான் காணக்கிடைத்தது. நூலாசிரியர்கள் இருவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அன்ஹுய், ஹுனான் மாகாணாவாசிகள். இருவருமே எழுத்தாளர்கள். தம்பதிகள். அக்டோபர் 1, 2000 அன்று அன்ஹுயின் தலைநகரமான Hefei என்னும் பகுதியில் இருந்து இவர்கள் தங்கள் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தனர். பெய்ஜிங்கில் இருந்து தெற்கே 500 மைல் தொலைவில் உள்ள ஒரு பகுதி இது. இங்கிருந்து தொடங்கி அன்ஹுயில் உள்ள ஐம்பதுக்கும் அதிகமான மாகாணங்களை இவர்கள் பேருந்து மூலமாகவும் கால்நடையாகவும் சுற்றிவந்தனர்.

ஆகப் பெரும் வல்லரசாக ஜொலித்துக்கொண்டிருக்கும் சீனாவின் இன்னொரு பக்கத்தைக் கண்டறிவதே இந்தப் பயணத்தின் நோக்கம். சீன விவசாயிகளிடம் உரையாடி அவர்கள் எதிர்கொள்ளும் துயரங்களை, கொடுமைகளை நேரடி அனுபவங்கள் வாயிலாக நூலாசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அதிர்ச்சியூட்டும் பல உண்மைகளை தரவுகளோடு முன்வைக்கும் இந்தப் புத்தகம் உடனடியாக சீனாவில் தடைசெய்யப்பட்டது.

பல விவசாயிகளின் ஆண்டு வருமானம் 270 யுவான். கிட்டத்தட்ட 1400 ரூபாய். என்றால், மாதத்துக்கு, 115 ரூபாய். வெங்காயம் பயிரிடும் ஒரு விவசாயியால் காசு கொடுத்து வெங்காயம் வாங்கமுடியாது. சாப்பிடவே போதுமான காசு இல்லை என்றாலும் கிராம அதிகாரிகளுக்கு பெரும் தொகையை வரியாகச் செலுத்தியாகவேண்டும். மறுத்தால், வரி வசூலிக்கும் குழு சம்பந்தப்பட்ட விவசாயியின் வீட்டுக்கு நுழைந்து, அவர் வசமுள்ள பொருள்களை பறிமுதல் செய்யும். பன்றி முதல் வீட்டுச்சாமான் வரை எதையும் பறித்துச் செல்லும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு. இது தவிர, விவசாயியை அடிக்கலாம். கைது செய்யலாம். சிறையில் தள்ளலாம். அபராதம் விதிக்கலாம்.

காசில்லை விட்டுவிடுங்கள் என்று கதவைப் பூட்டிக்கொண்டால், கதவு உடைத்து திறக்கப்படும். கதவை உடைத்து திறக்கவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியதற்காக சிறப்பு அபராதம் விதிக்கப்படும். மிரட்டி, அடித்து பணத்தைப் பிடுங்கிகொள்வார்கள். பிறகு, இருப்பதிலேயே பெரிய உணவகத்துக்குச் சென்று வரி வசூலிக்கும் குழு சாப்பிடும். பில் கட்டுவது சம்பந்தபட்ட விவசாயியின் கடமை. Ding Zuoming என்னும் விவசாயி, வரி வசூலிப்பவர்களிள் அராஜகத்தை அம்பலப்படுத்தி சீன உயர் அதிகாரிகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொடர்ச்சியாகப் பல புகார்களை அனுப்ப ஆரம்பித்தார். மக்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்தினார். கோபமடைந்த அதிகாரிகள் டிங்கை கைதுசெய்தனர். சித்திரவதை செய்யப்பட்டு அவர் கொல்லப்பட்டார்.

ஒரு சில கிராம அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இதைக் குறுக்கிவிடமுடியாது. மேல் மட்டத்தின் துணை இல்லாமல் இந்த அதிகாரிகளால் இவ்வாறு இயங்கமுடியாது. அந்த வகையில், விவசாயிகள் மீது மேலாதிக்கம் செலுத்தவேண்டும் என்பது சீனாவின் அரசாங்க கொள்கை. 1990ம் ஆண்டைவிட 2003ம் ஆண்டு தானிய உற்பத்தி அளவு குறைந்துள்ளது. விவசாயிகளின் தனிநபர் வருமானம் 1997ம் ஆண்டைவிட 6 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், மருத்துவம், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளின் மதிப்பு அதிகரித்துவிட்டது. கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான இடைவெளி முன்னெப்போதையும்விட இப்போது அதிகரித்துள்ளது. ஆனால் தற்போதைய சீனா, நகரங்களை மட்டுமே கவனித்துவருகிறது. நகரங்கள் ஜொலித்தால் போதும். நகரங்கள் தொழில்மயமானால் போதும். நகரங்களின் செல்வம் குவிந்தால் போதும். கிராமங்களை ஒடுக்குவதில் தவறில்லை. விவசாயிகளிடம் இருந்து கூடுதல் வரி பெற்றுக்கொள்வதில் தவறேதுமில்லை.

மொத்தம் 93 வகையான வரிகள் விவசாயிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றன. இவை போக, 293 தனிப்பிரிவுகளில் வெவ்வேறு காரணங்களுக்காக உள்ளூர் கிராம அதிகாரிகளுக்கு வரி கட்டவேண்டும். கிராம நிர்வாக அலுவலகம் கட்டுவதற்கு, பள்ளிக்கூடம் கட்டுவதற்கு, சுற்றுச்சூழல் மேம்பட, கட்சி உறுப்பினர்களுக்கு சமூக நல விடுதி உருவாக்க, குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அமலாக்க என்று பல்வேறு காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன. உங்கள் வீட்டில் புதிதாக ஒரு பன்றிக்குட்டி பிறந்தால் அதற்கு வரி செலுத்தியாகவேண்டும். காவலாளிகளுக்குச் சீருடைகள், காலுறைகள் வாங்குவதற்கு தனியே வரி வசூலிக்கப்படும். அரசாங்க நிமித்தமாகவும் கட்சி வேலைகளுக்காகவும் உறுப்பினர்கள் பயணம் செய்வதற்கு விவசாயிகளிடம் இருந்து வரி திரட்டப்படுகிறது. ஒரு மாட்டின் உடல் மீதுள்ள முடிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான வரிகளை நாங்கள் செலுத்திக்கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் விவசாயிகள்.

புத்தகம் எங்காவது கிடைத்தால் படிக்கவேண்டும்.


 அண்ணன் மருதன் அவர்களுக்கு  நன்றி எனும் வாக்கியத்தோடு  இக்கட்டுரை முடிக்கப்படாவிடின் நான் நன்றியற்றவனாவேன். 

                                                                                                                       அன்பன்
                                                                                                                       தமிழ்


மூலக் கட்டுரையாளர்:மருதன்.
                                                                                                                   
                 



16 July 2011

பலமே வாழ்வு -2

ழுதி முடித்த பின்தான் யோசித்தேன்.இந்நாட்டுப் பாதுகாப்பிற்கு சாதாரணமானவர்கள் என்ன செய்து விட முடியும்?பெருமூச்சு மட்டுமா ,ஆம் என தோராயமாக ஒப்புக்கொண்டாலும் நம்மாலும் ஒன்றேஒன்றுமட்டும் முடியும் என நினைக்கிறேன்.


ஒரு வழி
ஒன்று வழி.

ஒன்று படுவதும் வழி .
எத்தனை இடர்ப்பாடு வரினும் இந்தியராகிய நாம் உடனே உதவிக்கரம் நீட்டுகிறோம்.ஆம்.ஜப்பான் மக்கள் அணுகுண்டால் பாதிக்கப்பட்டே மீண்டவர்கள்.நம்முடைய இழப்புகள் அவர்களோடு ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை அது ஆழிப்பேரலையாக இருந்தாலும்,அணுகுண்டுவெடிப்பாக இருந்தாலும்.உலகத்தார் எத்தனை உச் கொட்டினாலும் அவர்கள் தங்கள் வளர்ச்சியின்மூலம் பிரமிப்பூட்டுகிறார்கள்."அட இந்திய மக்களும் முன்னேற்றபாதைக்கு செல்கின்றனரோ, அவர்களின் தன்னம்பிக்கையைப் பாருங்களேன்"என மற்றவர்கள் எண்ணும்படி நம் வாழ்க்கைப்பாதை மாறுமா?.காலம் பதிலுரைக்கும்.மாலன் 'என் ஜன்னலுக்கு வெளியே' என்ற புத்தகத்தில் இதே போன்ற கருத்தையே கூறியிருக்கிறார்(26 -11 சம்பவம் பற்றி ) .சரி இதற்கும் பாதுகாப்பிற்கும் என்ன சம்பந்தம் எனும் கேள்வி வரலாம்.
" இந்திய திருநாட்டின் பாதுகாப்பு குறைபாடுகள்" என்ற தலைப்பின் கீழும் பத்தி பத்தியாக எழுதலாம்.ஆனால் செயல் இல்லாத சொல் விழலுக்கு இறைத்த நீர் போலாகும்.செயல்படுத்தி இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது இந்திய பாதுகாப்பு,உள்துறை அமைச்சகப் பணியாகும்.
என்ன உங்கள் இருப்பிடம் பாதுகாப்பாகத்தானே உள்ளது.

இன்னும் அதிகமாய் எழுதலாம்.ஆனால் "வாய்ச்சொல் வாள் வீச மாட்டார்கள்   "எனும்படி யாராவது அறிக்கை வெளியிட்டுவிட்டால்.
                           
                                                                                                                       அன்பன்
                                                                                                                         தமிழ்    
                                                  

பலமே வாழ்வு

நிறைய எழுத வேண்டி நினைக்கையில் எல்லாம் குறைவாகத்தான் எழுத முடிகிறது.முந்தின பதிவைத்தான் சொல்கிறேன்.இன்று தினமணி நடுப்பக்க கார்டூன் பார்த்தேன்.சாதாரண பாமர மக்கள் உயிருக்கு பாதுகாப்பு தர முடியாத அரசின் அவல நிலையை சாடுவது போன்ற அந்த கார்டூன் உள்துறை அமைச்சருக்கு உறைக்குமா?இல்லை ,இல்லை,இல்லவே இல்லை.
                                   அடிக்கடி அந்த செய்தி எனக்கு நினைவில் வருகிறது.ஐ.மு.கூட்டணி பெரும்பான்மை பலம் இல்லாத முதல் 5  ஆண்டுகளையே எதிர்ப்பின்றி கடந்து விட்டது.ஆனால் அறுதி பெரும்பான்மை பெற்ற இந்த 5 ஆண்டுகளை கடக்க படாத பாடு படுகிறது.பா.ஜ.க.வோ பயன்படுத்தாமல் உள்ளது.
                                      பதவி ஏற்ற போது கிடைத்த பெருமைக்கான விலையை மன்மோகன் இப்போதுதான் தருகிறார் .இவ்வளவு பலவீனமான  பிரதமரை இப்போதுதான்  இந்தியா கண்டிருக்கும்.
                                        நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய நாம் என்னதான் செய்ய போகிறோம் ( வேண்டும் ).உங்கள் கருத்துக்களை பதிவு செய்க .
                                            இன்னும் அதிகமாய் அடுத்த பதிவில்.
                                                                                                  அன்பன்
                                                                                                        தமிழ்
இணைப்பு :
http://in.news.yahoo.com/blasts-rock-mumbai.html

15 July 2011

கற்போம் கற்பிப்போம்

வணக்கம். இணைய வழி வாசிப்பு கொண்ட உங்களுக்கு. வெறுமனே புத்தக வழி வாசிப்பு மட்டுமே கொண்டிருந்த என்னை புதிய மாற்றுச் சிந்தனைக்கு மாற்றிய பல நல்ல உள்ளத்தார்க்கு நான் செய்யும்/செலுத்தும் முதல் நன்றி.இந்த உலகில் இதுகாறும் நீங்கள் எல்லாம் கண்ட நிகழ்வுகள் என்னையும் யோசிக்க வைத்துள்ளன .
எனக்கான சிந்தனைகளாகவே இனி வரப்போகும் பதிவுகளை நான் எண்ணுகிறேன் .
தமிழ் என் பெயர் மட்டுமல்ல இனம்,மொழி என உணரவைத்த தந்தை முதல் என் சிந்தனைகளோடு ஒத்துப்போன அன்பர்கள் நவபாரத்,அர்ஜுன் பரமசிவம் ,சிதம்பரம் ஆகியோரையும் என் விசைப்பலகை மறக்காது.    
                             "நீ கற்றவற்றை இச்சமூகத்திற்கு கற்றுத் தராவிடில் அதனால் பயனில்லை "என்ற என் அப்பாவின் கட்டளைக்கு இணங்கவே LEARN AND TEACH   என பெயரிட்டுள்ளேன் . உங்கள் ஆதரவும் பங்களிப்பும் எதிர்பார்த்து ,
                                                                                                                     அன்பன்
                                                                                                                           தமிழ் .