தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.
0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 100 | 1000 |
௦ | ௧ | ௨ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | ௰ | ௱ | ௲ |
எண் ஒலிப்பு
- ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் சொற்களும் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
எண் | அளவு | சொல் |
1/320 | 320 ல் ஒரு பங்கு | முந்திரி |
1/160 | 160 ல் ஒரு பங்கு | அரைக்காணி |
3/320 | 320 ல் மூன்று பங்கு | அரைக்காணி முந்திரி |
1/80 | 80 ல் ஒரு பங்கு | காணி |
1/64 | 64 ல் ஒரு பங்கு | கால் வீசம் |
1/40 | 40 ல் ஒரு பங்கு | அரைமா |
1/32 | 32 ல் ஒரு பங்கு | அரை வீசம் |
3/80 | 80 ல் மூன்று பங்கு | முக்காணி |
3/64 | 64 ல் மூன்று பங்கு | முக்கால் வீசம் |
1/20 | 20 ஒரு பங்கு | ஒருமா |
1/16 | 16 ல் ஒரு பங்கு | மாகாணி (வீசம்) |
1/10 | 10 ல் ஒரு பங்கு | இருமா |
1/8 | 8 ல் ஒரு பங்கு | அரைக்கால் |
3/20 | 20 ல் மூன்று பங்கு | மூன்றுமா |
3/16 | 16 ல் மூன்று பங்கு | மூன்று வீசம் |
1/5 | ஐந்தில் ஒரு பங்கு | நாலுமா |
1/4 | நான்கில் ஒரு பங்கு | கால் |
1/2 | இரண்டில் ஒரு பங்கு | அரை |
3/4 | நான்கில் மூன்று பங்கு | முக்கால் |
1 | ஒன்று | ஒன்று |
- எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை இருக்கும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
எண் | ஒலிப்புச் சொல் |
1 | ஒன்று (ஏகம்) |
10 | பத்து |
100 | நூறு |
1000 | ஆயிரம்(சகசிரம்) |
10,000 | பதினாயிரம்(ஆயுதம்) |
1,00,000 | நூறாயிரம்(லட்சம் - நியுதம்) |
10,00,000 | பத்து நூறாயிரம் |
1,00,00,000 | கோடி |
10,00,00,000 | அற்புதம் |
1,00,00,00,000 | நிகற்புதம் |
10,00,00,00,000 | கும்பம் |
1,00,00,00,00,000 | கணம் |
10,00,00,00,00,000 | கற்பம் |
1,00,00,00,00,00,000 | நிகற்பம் |
10,00,00,00,00,00,000 | பதுமம் |
1,00,00,00,00,00,00,000 | சங்கம் |
10,00,00,00,00,00,00,000 | வெள்ளம்(சமுத்திரம்) |
1,00,00,00,00,00,00,00,000 | அந்நியம் |
10,00,00,00,00,00,00,00,000 | (அர்த்தம்) |
1,00,00,00,00,00,00,00,00,000 | பரார்த்தம் |
10,00,00,00,00,00,00,00,00,000 | பூரியம் |
1,00,00,00,00,00,00,00,00,00,000 | பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி) |
இன்னும் படிக்க
மேலும் படிக்க : http://oojass.blogspot.com/2011/10/blog-post_29.html?spref=tw
ReplyDeleteமிக அருமையான தகவல். தொல்காப்பியத்தில் பனை என்ற சொல்லுக்கு முகத்தல் அளவை எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான விளக்கம் எங்கேயும் என்னால் பெற முடியவில்லை. நான் இதற்கான உண்மைப் பொருளை அறிய விரும்பும் காரணம் திருக்குறளில் திருவள்ளுவர் பல இடங்களில் தினைஅளவு என்ற சொற்களை கையாண்டுள்ளார். தினை அளவு என்பதோடு பனை அளவு என்பதை எமது உரையாசிரியர்கள் மேம்போக்காக கூறும் கருத்தை ஏற்பது தர்க்க ரீதியானது எனக் கொள்ள முடியவில்லை. எனவே யாராவது பனை என்ற சொல்லுக்கான முகத்தல் அளவு பிரமானத்தை விளக்கம் தர முடிந்தால் நன்றியாய் இருப்பேன்.
ReplyDeleteநன்றி மனோ.
Deleteவிரைவில் நானும் இது பற்றி பிறரிடம் அறிந்தால் பகிர்கிறேன்.
நான் தற்போது Wordpress தளத்தில்தான் இயங்குகிறேன். தங்கள் மேலான கருத்துகளை http://thamizhg.wordpress.com/ -ல் தந்தாலும் மகிழ்வேன்.