29 October 2011

தமிழில் எண் குறிகள்



தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.
0123456789101001000

எண் ஒலிப்பு

  • ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் சொற்களும் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
எண்அளவுசொல்
1/320320 ல் ஒரு பங்குமுந்திரி
1/160160 ல் ஒரு பங்குஅரைக்காணி
3/320320 ல் மூன்று பங்கு அரைக்காணி முந்திரி
1/8080 ல் ஒரு பங்குகாணி
1/6464 ல் ஒரு பங்குகால் வீசம்
1/4040 ல் ஒரு பங்குஅரைமா
1/3232 ல் ஒரு பங்குஅரை வீசம்
3/8080 ல் மூன்று பங்குமுக்காணி
3/6464 ல் மூன்று பங்குமுக்கால் வீசம்
1/2020 ஒரு பங்கு ஒருமா
1/1616 ல் ஒரு பங்குமாகாணி (வீசம்)
1/1010 ல் ஒரு பங்குஇருமா
1/88 ல் ஒரு பங்குஅரைக்கால்
3/20 20 ல் மூன்று பங்குமூன்றுமா
3/1616 ல் மூன்று பங்குமூன்று வீசம்
1/5ஐந்தில் ஒரு பங்குநாலுமா
1/4நான்கில் ஒரு பங்கு கால்
1/2இரண்டில் ஒரு பங்குஅரை
3/4நான்கில் மூன்று பங்குமுக்கால்
1ஒன்றுஒன்று
  • எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை இருக்கும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
எண்ஒலிப்புச் சொல்
1ஒன்று (ஏகம்)
10பத்து
100நூறு
1000ஆயிரம்(சகசிரம்)
10,000 பதினாயிரம்(ஆயுதம்)
1,00,000நூறாயிரம்(லட்சம் - நியுதம்)
10,00,000பத்து நூறாயிரம்
1,00,00,000கோடி
10,00,00,000அற்புதம்
1,00,00,00,000நிகற்புதம்
10,00,00,00,000கும்பம்
1,00,00,00,00,000கணம்
10,00,00,00,00,000கற்பம்
1,00,00,00,00,00,000 நிகற்பம்
10,00,00,00,00,00,000பதுமம்
1,00,00,00,00,00,00,000சங்கம்
10,00,00,00,00,00,00,000வெள்ளம்(சமுத்திரம்)
1,00,00,00,00,00,00,00,000 அந்நியம்
10,00,00,00,00,00,00,00,000(அர்த்தம்)
1,00,00,00,00,00,00,00,00,000பரார்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,000பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)


இன்னும் படிக்க         

3 comments:

  1. மேலும் படிக்க : http://oojass.blogspot.com/2011/10/blog-post_29.html?spref=tw

    ReplyDelete
  2. மிக அருமையான தகவல். தொல்காப்பியத்தில் பனை என்ற சொல்லுக்கு முகத்தல் அளவை எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான விளக்கம் எங்கேயும் என்னால் பெற முடியவில்லை. நான் இதற்கான உண்மைப் பொருளை அறிய விரும்பும் காரணம் திருக்குறளில் திருவள்ளுவர் பல இடங்களில் தினைஅளவு என்ற சொற்களை கையாண்டுள்ளார். தினை அளவு என்பதோடு பனை அளவு என்பதை எமது உரையாசிரியர்கள் மேம்போக்காக கூறும் கருத்தை ஏற்பது தர்க்க ரீதியானது எனக் கொள்ள முடியவில்லை. எனவே யாராவது பனை என்ற சொல்லுக்கான முகத்தல் அளவு பிரமானத்தை விளக்கம் தர முடிந்தால் நன்றியாய் இருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மனோ.

      விரைவில் நானும் இது பற்றி பிறரிடம் அறிந்தால் பகிர்கிறேன்.

      நான் தற்போது Wordpress தளத்தில்தான் இயங்குகிறேன். தங்கள் மேலான கருத்துகளை http://thamizhg.wordpress.com/ -ல் தந்தாலும் மகிழ்வேன்.

      Delete